அதோ கதிதானா? கிரானைட் வழக்குகள்...

பி.ஆர்.பி விடுதலையான பின்னணி

கிரானைட் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.பி. கிரானைட்ஸ் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் மேலூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பைப்போல, கிரானைட் மோசடி வழக்கில் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி அளித்துள்ள தீர்ப்பு கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

“உயர் நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளான மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான் இது” என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கிறார்கள். மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியைக் கடுமையாகக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சமீபத்தில் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து இருந்தார்.

“கிரானைட் குவாரி வழக்குகளை மேலூர் மாஜிஸ்திரேட் முறையாக விசாரணை நடத்தவில்லை. அவருக்கு ஏதோ நிர்பந்தம் உள்ளது. தூங்குபவரை எழுப்பிவிடலாம், தூங்குவதுபோல் நடிப்பவரை எழுப்ப முடியாது. இவர் இரண்டாவது ரகம். ஏற்கெனவே, உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவைப் பின்பற்றாமல் செயல்படுகிறார். அதனால், இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்த உத்தரவில் நீதிபதி பி.என்.பிரகாஷ் குறிப்பிட்டு இருந்தார். அதை, தலைமை நீதிபதிக்கும் அனுப்பியிருந்தார். அதுபற்றிய செய்தியைக் கடந்த ஜூ.வி-யில் பதிவுசெய்து இருந்தோம். நாம் குறிப்பிட்டு இருந்ததுபோலவே, பி.ஆர்.பி-யை விடுதலை செய்து தீர்ப்பளித்துவிட்டார், மகேந்திர பூபதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்