கரன்சி கஜானா?

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. அதற்கு வேட்டு வைக்கும் வகையில், தமிழகத்தில் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்?

சிறுதாவூர் பங்களா

பங்களா என்றாலே பல மர்மங்களைக் கொண்டிருக்கும் என்பதற்கு உதாரணம் சிறுதாவூர் பங்களா. “சிறுதாவூர் பங்களாவுக்குப் பெரிய கன்டெய்னர் அடங்கிய லாரிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் களுக்குக் கொடுப்பதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்த கன்டெய்னர்களில் உள்ளது” என வைகோ அதிரடியாகக் குற்றம்சாட்டியிருப்பது தேர்தல் அரசியலில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. இதுகுறித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு வைகோ புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

சிறுதாவூர் பங்களாவில் நடந்தது என்ன?


சிறுதாவூருக்குச் செல்ல வேண்டுமானால், திருப்போரூரிலிருந்து மானாம்பதி வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை வழியாகத்தான் செல்லவேண்டும். அந்த வழியாகச் சென்றால் பங்களாவின் பின்பக்க வாயிலை அடையலாம். சிறுதாவூர் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில்தான் ஜெயலலிதாவின் பங்களா அமைந்துள்ளது.  நாம் பார்த்தபோது, அங்கு வாகனங்கள் வரிசைகட்டி நிற்பது கண்கூடாகத் தெரிந்தது. பங்களாவுக்கு அருகே பிற வாகனங்களோ, நபர்களோ நிற்க முடியாத அளவுக்குப் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம். பங்களாவைச் சுற்றி பசுமையான வயல்வெளிகளும், தென்னை - சப்போட்டா தோப்புகளும் உள்ளன. கெடுபிடிகள் அதிகம் என்பதால், பங்களாவை ஒட்டிய சில பகுதிகளில் பயிரிடப்படாமல் புதரும் புல்வெளியும் மண்டிக்கிடக்கின்றன. வயலுக்கு நீர் பாய்ச்சும் விவசாயிகளைத் தவிர, அந்த இடத்துக்குப் புதிய நபர் யார் வந்தாலும் போலீஸார் விசாரிக்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்