கழுகார் பதில்கள்!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

 சசிகலா, பிரேமலதா ஒப்பிடுக?


 சசிகலா பேசாமல் சாதிப்பார். பிரேமலதா பேசியே சாதிப்பார். ஜெயலலிதாவுக்காக கோயில் கோயிலாக அலைகிறார் சசிகலா. விஜயகாந்த்துக்காக ஊர் ஊராக அலைகிறார் பிரேமலதா. சசிகலாவிடம்தான் அ.தி.மு.க-வின் எதிர்காலம் இருக்கிறது. பிரேமலதாவை நம்பித்தான் தே.மு.தி.க இருக்கிறது. தமிழகத்தில் வளர்ந்துவரும் தலைவிகள்.

கே.ஏ.என்.நமசிவாயம், பெங்களூரு.

 அவசர அவசரமாக பி.ஜே.பி கூட்டணியில் சேர்ந்தார் சரத்குமார். அதே அவசரத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தார். என்ன காரணம்?


 அவர் எதற்காக அ.தி.மு.க கூட்டணியைவிட்டு விலகினார், எதற்காக சேர்க்கப்பட்டார் என்பது புரியாத மர்மங்களில் ஒன்று. இதில் சிக்கிக் கொண்டது பி.ஜே.பி-தான். அவரது வீட்டுக்கே போய் பேச்சுவார்த்தை நடத்தினார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். அவர்கள் முதன்முதலில் போய் பேச்சுவார்த்தை நடத்தியது பாரிவேந்தர் கட்சியுடன். அவரும் இவர்களுடன் இன்னமும் சேரவில்லை. முதலில் கூட்டணியில் சேர்த்தது சரத்குமாரை. அவரும் விலகிவிட்டார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி, மோடி செல்வாக்கை வைத்து, ஒரு கட்சியைக்கூட தனது அணியில் சேர்க்க முடியவில்லை என்பதுதான் தமிழ்நாட்டு யதார்த்தம்.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

 ஜெயலலிதா நடத்திய நேர்காணலுக்கும் தி.மு.க நடத்திய நேர்காணலுக்கும் என்ன வித்தியாசம்?


 கருணாநிதி நடத்தும் நேர்காணலில் ‘ஜனநாயகம்’(!) காக்க நான்கைந்து பேர் இருப்பார்கள். ஜெயலலிதா நடத்தும் நேர்காணலில் அவர் மட்டும்தான் இருப்பார். அது ஒன்றுதான் வித்தியாசம். மற்றபடி, தலைமை நினைப்பவர்தான் வேட்பாளர். இவை அனைத்தும் ஒருவித சம்பிரதாயம். அவ்வளவுதான்.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

 மு.க.அழகிரி மீண்டும் தி.மு.க-வில் இணைவார்போல் தெரிகிறதே?


 அழகிரியை தி.மு.க-விலிருந்து நீக்கிவிட்டார்கள்... மீண்டும் சேர்த்துவிட்டார்களா?  சில நாட்கள் மட்டும் கறுப்பு சிவப்பு கரை வேட்டி கட்டாமல் இருந்த அழகிரி, சில வாரங்களுக்கு முன்பு இரு வண்ண வேட்டி கட்ட ஆரம்பித்துவிட்டார். சில நாட்களுக்கு முன் அவரை அழைத்து கருணாநிதி பேசி சமாதானம் செய்துவிட்டார். ‘நீங்க நல்லா இருந்தா போதும் தலைவரே’ என்று அழகிரியும் அப்போது சொல்லி இருக்கிறார். கருணாநிதி திடீர் சமாதானம் ஆக முயற்சிக்கக் காரணம், மக்கள் நலக் கூட்டணிக்கு அழகிரி ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது என்பதால்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்