“அம்மா ஆட்சியில் சில குறைகள் இருக்கலாம்!”

‘தில்’ ராமராஜன்

அ.தி.மு.க தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் ஒரே விஷயங்கள்தான் ரிப்பீட் ஆகின்றன. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பைத் தவிர புதுசாக எதையும் பேச்சாளர்கள் சொல்ல முடிவது இல்லை. முன்பெல்லாம், அடுத்தும் நாங்கள்தான் என்று அடித்துப் பேசியவர்கள், ‘இப்போது எதிர்க் கட்சிகளின் பொய் பிரசாரத்தை நம்பாதீர்கள். அம்மாவுக்கே மறுபடியும் ஓட்டு போடுங்கள்’ என்று இறங்கிவந்துள்ளனர்.

கடந்த 29-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்துக்குப் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஏற்பாடு செய்திருந்தார். அதில் நடிகர் ராமராஜனின் பேச்சு இன்னும் ஒருபடி கீழே இறங்கி, ‘‘ஆட்சியில் குறைகள் இருப்பது சகஜம்தான்’’ என்று பேசியிருக்கிறார்.

அவருடைய ‘தில்’ பேச்சில் இருந்து... ‘‘விஜயகாந்த்தை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பிரேமலதா பேசுகிறார். யாருடன் யாரை ஒப்பிடுவது? தமிழகத்தில் வட இந்தியர்கள்கூட தமிழை நன்றாகப் பேசுகிறார்கள். ஆனால், விஜயகாந்த் பேசுவது புரியவில்லை. உங்களுக்குக் கூட்டம் கூடினால் மட்டும் போதுமா, மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாமா? உடல்நலம் சரியில்லாத கணவரை, அருகிலிருந்து கவனிக்காமல் ஊர் ஊராகச் சுற்றி பிரேமலதா பிரசாரம் செய்கிறார். விஜயகாந்த் அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? தொப்புளில் பம்பரம்விட்டார். கருணாநிதி குடும்பம் தமிழகத்தை நாசமாக்கியது போதாதென்று இப்போது விஜயகாந்த் குடும்பமும் அரசியலுக்கு வந்துவிட்டது. சினிமா வில்தான் காமெடி நடிகர்கள் அதிகம் இருந்தனர். இப்போது அரசியலிலும் அதிகமாகிவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்