பெரியோர்களே... தாய்மார்களே! - 77

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

திருக்குவளையில் பிறந்து - திருவாரூரில் படித்து - விழுப்புரத்தில் நாடகம் போட்டு - புதுச்சேரியில் அடிவாங்கி - ஈரோட்டில் பத்திரிகையாளராக உருப்பெற்று - கோவையில் கதை, வசனகர்த்தாவாக மாறி - சேலத்தில் முழு சினிமாக்காரராகவே பரிணாமம் பெற்று -

சென்னையில் தி.மு.க பிரசாரக் குழு செயலாளர் பதவியைப் பெற்று - கோவில்பட்டியிலும் தூத்துக்குடி யிலும் கட்சியைத் தொடங்கிவைத்து - திருச்சியில் அண்ணாவுக்குப் பதிலாகப் பேசி - தஞ்சை மாவட்டம் முழுக்க 26 நாட்கள் தொடர்ந்து அலைந்து கட்சியை வளர்த்து -
திருவையாற்றில் கறுப்புக்கொடி பிடித்து -

சென்னை மாநில மாநாட்டு வரவேற்புக்குத் தலைவர் ஆகி - கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து - திருச்சி சிறையில் சித்ரவதைப்பட்டு - நாகையில் போட்டியிட வலம்வந்து - குளித்தலையில் போட்டியிட்டு -

சேலம் தொடங்கி பல்வேறு ஊர்களில் உதயசூரியன் நாடகம் போட்டு - நங்கவரம் விவசாயிகளுக்காகப் போராடி - முதுகுளத்தூருக்கு விசாரணைக்குப் போய் - பரமக்குடி,சிவகங்கையில் கட்சியை வளர்த்து - ​தேவகோட்டை இடைத்தேர்தலில் பிரசாரம் செய்து-

சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றி அண்ணா அணிவித்த மோதிரத்தை சேலத்தில் தொலைத்து - அதை திருச்சி காமாட்சி எடுத்துக்கொடுத்து - தஞ்சாவூர் தொகுதியில் வென்று - சிதம்பரம் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செயல் திட்டக்குழுத் தலைவர் ஆகி -

திருவண்ணாமலை இடைத்தேர்தலில் தி.மு.க-வை வெற்றி பெறவைத்து - சென்னைக் கடற்கரையில் 10 லட்சம் ரூபாய் சபதம் ஏற்று - நெல்லை இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்துக்கு தலைமை வகித்து - சென்னையில் ‘அன்பகம்’ கட்டி - தடுப்புக் காவல் சட்டப்படி கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு-

திருப்புமுனை மாநாடாம் விருகம்பாக்கம் தேர்தல் மாநாட்டு இடத்தைச் செம்மைப்படுத்தி - சைதாப்பேட்டையில் நின்று - வென்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் போனதால்தான், அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி வசமானது தமிழ்நாடு!

‘‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” என்று அண்ணாவின் கல்லறையில் எழுதி வைத்துவிட்டு நிமிர்ந்த தம்பிமார்கள், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாக இல்லை என்பதை ஒரே வாரத்தில் காட்டினார்கள். தற்காலிக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் நாவலர் நெடுஞ்செழியன். ஆனால், நிரந்தர முதல்வராக கருணாநிதியைக் கொண்டுவர வேறு சிலர் முயற்சித்தார்கள். ஈரோடு சின்னச்சாமி இதில் முதலாமவர். மதியழகன், சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன், கோவை செழியன் ஆகியோர் கருணாநிதியே முதல்வராக வேண்டும் என்பதை முன்னெடுத்தார்கள். எம்.ஜி.ஆரின் பலம் இவர்களுக்கு யானை பலமாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்