"பணத்துக்காக வாக்கை விற்பவனும் பிணம்தான்!"

ந்திய தேர்தல் ஆணையம், விகடன் குழுமம், தி சென்னை ஆஃப் பேங்கிங் இணைந்து நடத்தும் ‘நம் விரல்... நம் குரல்!’ என்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2016 விழிப்பு உணர்வுக் கருத்தரங்கம், கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வி, செயலர் விஜயகுமார், தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமார், செயல் இயக்குநர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்திலும் இதேபோன்று கருத்தரங்கம் நடந்தது. இங்கு, டிஸ்ட்ரிக்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுகேஷன் ட்ரைனிங், ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி, மதர் தெரசா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் அண்ட் சயின்ஸ், ஈஸ்ட் கோஸ்ட் காலேஜ் ஆஃப் நர்ஸிங், இந்திரா காந்தி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், கிருஷ்ணசாமி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஆச்சார்யா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், காஞ்சி மாமுனிவர் சென்டர் ஃபார் போஸ்ட் கிராஜுவேட், சாரதா கங்காதரன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி, ஆச்சார்யா பொறியியல் கல்லூரி ஆகிய 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாவட்டத் தேர்தல் அதிகாரி சுந்தர வடிவேலு, துணை மாவட்ட தேர்தல் அதிகாரி தில்லை வேலு, செழியன் பாபு (முறை சார்ந்த கல்வி மற்றும் வாக்காளர் பங்களிப்பு) ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்