“இரண்டு ஊழல் கட்சிகளும் அடித்துச் செல்லப்படும்!”

- விஜயகாந்த் அணியினரின் மாற்று அரசியல் மாநாடு!

தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணியின் ‘மாற்று அரசியல் தேர்தல் சிறப்பு மாநாடு’ ஏப்ரல் 10-ம் தேதி மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு அடுத்துள்ள மாமண்டூர் ஸ்ரீஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மக்கள் நலக் கூட்டணியினர், முதலில் திருச்சியில் மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். திருச்சியில் மாநாடு நடத்துவதில் இடம் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து மக்கள் நலக் கூட்டணியினர் விஜயகாந்த்திடம் ஆலோசனை நடத்தினர். உடனே, ‘‘நம்ம கல்லூரியிலேயே மாநாட்டை வெச்சுக்கலாம்’’ என்று விஜயகாந்த் சொல்ல, ம.ந. கூட்டணிக் கட்சியினர் உற்சாகம் அடைந்தனர். விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு முன்பக்கம் உள்ள பெரிய மைதானத்தில்தான் மாநாட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் தொண்டர்கள் அமர்வதற்காக இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். ஏப்ரல் 3-ம் தேதி காலையிலிருந்தே ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மைதானத்தைச் சமன் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 3-ம் தேதி மாலை மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்தனர்.

மாலை ஐந்து மணிக்கு சுதீஷ் வந்துவிட்டார். ‘‘பத்திரிகையாளர்கள் யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்தவுடன் படம் எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று அன்புக் கட்டளை போட்டுவிட்டுத் தனியாக அமர்ந்திருந்தார் சுதீஷ். அடுத்த சில நிமிடங்களில் வைகோ, முத்தரசன், மல்லை சத்யா உள்ளிட்ட வர்களும் வந்தனர். திருமாவளவன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அன்று வரவில்லை. ஆனால், தங்கள் கட்சி மாவட்டப் பொறுப்பில் இருப்பவர்களை அனுப்பி இருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்