தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? - கேள்வி கேட்கிறார் வழக்கறிஞர்!

ட்டுக்குப் பணம் கொடுக்கக் கூடாது என்றும் பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லும் தேர்தல் ஆணையம், ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கிறதா என்றால்... இல்லை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக ஒவ்வொரு தேர்தலின்போதும் சிக்குபவர்கள் பல நூறுபேர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை என்ன தெரியுமா? சொற்ப அபராதம் மட்டும்தான்.

ஆனால், ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகப் பிடிபட்டு, தண்டனை விதிக்கப்பட்டால் பிடிபட்ட நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்க வேண்டும். இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தேர்தல் அதிகாரிகளுக்குக்கூட இந்தத் தகவல் தெரியவில்லை என்பதுதான் பரிதாபம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக 400-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட 200 பேரில், ஒருவர் பெயர்கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. தமிழகத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகக் கைதாகி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டும்தான், 6 ஆண்டுகளுக்கு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்காக வழக்குத் தொடர்ந்தவர் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன். ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களைச் சட்டப்படி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின் கீழ் போராடி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்