"பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் அம்பேத்கருக்கு முற்றிலும் எதிரானவை!"

அம்பேத்கர் பேரன் அதிரடி

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது ஆண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை வந்த அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் யஸ்வந்த் அம்பேத்கரை சந்தித்தோம்.
“என் தாத்தா இறந்தபோது எனக்கு இரண்டு வயது.  நான் பிறந்ததை நினைத்துச் சந்தோஷப்பட்ட அவர், எனக்கு ‘வெளிச்சத்தின்’ அடையாளமாக பிரகாஷ் என்று பெயர் வைத்தார்” என்று ஆரம்பித்தவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘அம்பேத்கர் தீவிர சனாதன எதிர்ப்பாளர். ஆனால், அவரை பி.ஜே.பி கையில் எடுத்து அரசியல் செய்வதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?”

“இது அம்பேத்கரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. அம்பேத்கரின் கொள்கைகள், கனவுகள் அவரது எண்ணங்கள் ஒரு திசையில் பயணிக்கின்றன. பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் கொள்கைகள் வேறு திசையில் பயணிக்கின்றன. இரண்டும் ஒரே நேர்கோட்டில் செல்லவில்லை. பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் முற்றிலும் அம்பேத்கருக்கு எதிரானவை. அம்பேத்கரின் கொள்கைகள், தத்துவங்களை பி.ஜே.பி. அரசு கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால், சாமானியனின் பார்வைக்கு அம்பேத்கரைக் கொண்டாடுவதுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து இருக்கிறார்கள். உண்மையில் அவரின் கொள்கைகள் கொலை செய்யப்படுகின்றன.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்