“சாதிமறுப்பு தம்பதிகளை நாங்கள் பாதுகாப்போம்!”

சங்கரய்யாவின் சங்கநாதம்

டதுசாரி சிந்தனை கொண்ட இன்றைய தலைமுறையினருக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ ஆக இருப்பவர், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்ரய்யா.

எளிமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சங்கரய்யாவுக்கு, ‘அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான விருது’ காயிதே மில்லத் அறக்கட்ட ளையால் சமீபத்தில் வழங்கப் பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்ட சங்கரய்யா, விருதுத்தொகையான இரண்டரை லட்சம் ரூபாயை ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்காக அப்படியே கொடுத்துவிட்டார். இன்னும் சில மாதங்களில் 95 வயதைத் தொடப்போகிற சங்கரய்யாவை சந்தித்தோம்.

“தமிழ்நாட்டில் எல்லாச் சட்டமன்றத் தேர்தல்களையும் பார்த்தவர் நீங்கள். முந்தைய தேர்தல்களுக்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?”

“ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு தன்மைகொண்டது. அது கூடுதல், இது குறைச்சல் என்று எதையும் சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ் என்ற இரண்டு பெரிய அகில இந்திய கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க என்ற இரண்டு பெரிய மாநிலக் கட்சிகள் ஆகியவை இல்லாமல், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இணைந்து மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப் பட்டுள்ளது. இதில் நல்லதொரு திருப்பமாக, தே.மு.தி.க-வுக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.”

“தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் கூடுகிறது. ஆனால், அது வாக்குகளாக மாறுமா?”

“எங்களுக்கு இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்றால், நிச்சயமாக அது வாக்குகளாக மாறும். இது, தமிழகத்தில் ஒரு பெரும் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும்.”

“ஏராளமான சாதிமறுப்புத் திருமணங்களை நீங்கள் நடத்திவைத்திருக்கிறீர்கள். இன்றைக்கு, ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறிவிட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?”


“குறிப்பிட்ட சில சாதிய அமைப்புகள், தலித் மக்களுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிடுகிறார்கள். ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பாரதியின் பாடலை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டால் இத்தகைய நிலைமை வருமா? 21 வயது நிரம்பிய ஆணும், 18 வயது நிரம்பிய பெண்ணும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று நம் அரசியல் சட்டம் சொல்கிறது. சட்டத்தை மதிக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை. தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்