“என் மனதை யாராலும் சிறைவைக்க முடியாது!”

13 ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பின் டாக்டர் பிரகாஷ்

‘டிமாண்டி காலனி’ வீட்டைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். டாக்டர் பிரகாஷின் நெற்குன்றம் வீடு, அப்படித்தான் பேரமைதியுடன் காட்சி அளிக்கிறது. வீடு முழுக்க விதவிதமான சிற்பங்கள்; அவரே வரைந்த ஓவியங்கள்; குவியலாக அவர் எழுதிய புத்தகங்கள்; படுக்கை அறையிலும்கூட ஆராய்ச்சிக்காகக் கிடத்தப்பட்டிருக்கும் மனித எலும்புகள்; தலைமாட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஹிட்லர் படம்... என அந்த வீடு அத்தனை விநோதமான ஆச்சர்யங்களோடு இருக்கிறது.

‘‘13 வருட சிறை நாட்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறீர்களா?’’

‘‘முதல்நாள் அனுபவம் மிகக் கொடூரமானது. என் கண்முன் இருக்கும் இரும்புக் கதவில் நீளமான ஆறு கம்பிகள், எத்தனைமுறை எண்ணினாலும் ஆறிலிருந்து ஏழு ஆகாது. எனக்குத் தனிமை வேண்டும். கொஞ்ச நேரமாவது நான் என்னுடன் தனியாக இருக்க வேண்டும். பேஷன்ட், கிளினிக், ஆபரேஷன், நோயாளிகள், அவர்களின் சொந்தக்காரர்கள், ஆஸ்பத்திரி, மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா  எல்லோரும் சேர்ந்து எனக்கு ரொம்ப டென்ஷன் கொடுத்தார்கள். இதெல்லாம் விட்டுவிட்டு தனிமையைத் தேடி நான் எங்கேயோ ஓடிவிடுவேன். ஆனால், அந்தத் தனிமை கொடுமையானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்