பேரம்... பணம்... பிரேமலதா! - சந்திரகுமார் சாட்டை - சரியும் தே.மு.தி.க.

சீட்டுக்கட்டுபோல சரிய ஆரம்பித்து இருக்கிறது தே.மு.தி.க.!

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக மக்கள் நலக் கூட்டணிக் கட்சியினரால் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் விஜயகாந்த். ‘‘இதெல்லாம் வேலைக்கு ஆகாது” என்று அந்தக் கட்சியின் மூன்று எம்.எல்.ஏ-க்களும் ஐந்து மாவட்டச் செயலாளர்களும் கட்சியைவிட்டுக் கம்பி நீட்டிவிட்டார்கள்.


திடீர் போர்க்கொடி!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்தை அடைந்தது தே.மு.தி.க. ஆனால், அந்தக் கட்சியில் இருந்து 8 எம்.எல்.ஏ-க்களைத் தனியாகப் பிரித்து தன்வசம் வைத்துக்கொண்டார் ஜெயலலிதா. அதில் இருந்தே சட்டசபைக்குப் போவதையும் விஜயகாந்த் குறைத்துக்கொண்டார். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் இணைவார் என்று பலராலும் எதிர்பார்க்கப் பட்டது. கருணாநிதியும் அதனை உறுதிப் படுத்தினார். இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். அவரை முதலமைச்சர் வேட்பாளராக வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் அறிவித்தார்கள். இதற்கு, ‘தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

கூட்டணி சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் ஈரோடு எம்.எல்.ஏ-வுமான சந்திரகுமார், ‘‘இரண்டு திராவிடக் கட்சிகளின் காலம் முடிந்தது. இனி வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று முதல்வராக கேப்டன் வருவார்’’ என்று பேசினார். இப்போது இதே சந்திரகுமார்தான் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இவருடன் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சி.ஹெச்.சேகர் ஆகியோர் கைகோத்து உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்