கழுகார் பதில்கள்

படம்: ஏ.சிதம்பரம்

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

விஜயகாந்த் முதல்வரானால், வைகோதான் துணை முதல்வர் என்றும், தொல்.திருமாவளவன் கல்வி அமைச்சர் என்றும், ஜி.ராமகிருஷ்ணன் நிதி அமைச்சர் என்றும், முத்தரசன் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று சுதீஷ் பேசி உள்ளது பற்றி?

துணை முதல்வர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகிய பதவிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தருவதற்கு தே.மு.தி.க. தயாராக இருந்தால் அதுபற்றி விஜயகாந்த் கையெழுத்துடன் ஒப்பந்தம் போட்டுவிடுவதே சரியானது.

பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

தமிழ் மாநிலக் காங்கிரஸ், தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதா?


அதிகாரப்பூர்வமாகச் சொல்லவேண்டுமானால் இல்லை. ஆனால், ரகசியப் பேச்சுவார்தைகள் நடக்கின்றன. த.மா.கா-வை தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ப்பதற்கு பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள். காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் சேர முடியுமா என்ற தயக்கம், த.மா.கா-வுக்கு இருக்கிறது. ஜி.கே.வாசனை சேர்க்கலாமா என்ற தயக்கம், காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது. இந்தத் தயக்கம் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் இறங்கி இருப்பவர்களுக்கும் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்