“இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குதே”

மதுரை மாணவர்களின் டெரர் வாக்குமூலங்கள்!

ஓர் ஆட்சி நல்லாட்சியா, இல்லை பொல்லாத ஆட்சியா என முடிவு செய்வதற்கு அடிப்படையான ஒன்று, அந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற உண்மைகள்தான். அதைப் பொறுத்துத்தான் அந்த ஆட்சியின் வெற்றி அமையும். நடந்துவரும் இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது, போலீஸாரின் செயல்பாடுகள் குறித்து மதுரை மாணவர்களிடம் கேட்டோம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அமெரிக்கன் கல்லூரி, சட்டக்கல்லூரி, யாதவர் கல்லூரி, வக்ஃபுபோர்டு கல்லூரி மாணவர்கள் இதில் பங்கெடுத்து தங்களது கருத்துக்களைச் சொன்னார்கள்!

‘‘அரசாங்கத்தின் மீது பயமே இல்லை!”

‘‘கடந்த 5 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் மிக மோசமான நிலையில்தான் உள்ளன. ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் பரமக்குடியில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதற்கான நடவடிக்கைகள் ஏதும் இன்றுவரை  எடுக்கப்படவில்லை. இதனால் கொலை செய்யப்பட்டோரின் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. மேலும், அடுத்தடுத்து நடந்த சாதிவெறி கொலைகளையும் கண்டு கொள்ளாமல் இருந்தார் நம் முதல்வர். சாதியை ஒழிக்கவோ, இல்லை சாதிவெறிக் கொலைகளைத் தடுக்கவோ எந்த ஒரு நடவடிக்கையும் முதல்வர் எடுக்கவில்லை. அவரின் எண்ணம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சியை எப்படிப் பிடிப்பது என்பது குறித்து மட்டும்தான் உள்ளதே தவிர, மக்களின் அமைதியைப் பற்றிச் சிந்திக்கவே  இல்லை. சாதி ஆணவக் கொலைகள் எங்கோ நடக்கிறது, யாருக்கோ நடக்கிறது என்று பார்க்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் தனி மனிதனையும் பாதிக்கும். நேற்று அவர்களுக்கு நடந்தது. நாளை எனக்கு நடக்கலாம். எனவே, நான் அதுபற்றி பயப்படத்தான் வேண்டும். இந்தச் சட்ட விரோதமானச் செயல்கள் ஏன் நடக்கிறது என்றால் அரசின் மீது மக்களுக்கு பயம் இல்லாதது தான்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்