“தி.மு.க. ஆட்சியின் முக்கியத்தை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்!”

பொன்.குமார் பளீர்!

தி.மு.க கூட்டணி முடிவாகிவிட்டது. காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமூக சமத்துவப் படை, பெருந்தலைவர் காமராஜர் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் இருக்கும் தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் பொன்.குமாரிடம் பேசினோம்.

‘‘தி.மு.க கூட்டணியில் இடம்பெறக் காரணம் என்ன?’’

‘‘கூலித் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளிகள், விவசாயிகள், அமைப்புசாராத் தொழிலாளிகள் என விளிம்பு நிலை மக்களுக்காகவும், அவர்களும் அதிகார பலம் பெற வேண்டும் என்கிற நோக்கத்துக்காகவும் எங்கள் கட்சி 1978-ல் ஆரம்பிக்கப்பட்டது. எங்களின்  போராட்டங்கள் மூலம் வாரியங்கள் தொடங்கப்பட்டன. போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த வேளையில் தேர்தல் அரசியலில் பங்கேற்பதுதான் அதிகாரத்தைப் பெற்றுத் தரும் என்று முடிவுசெய்தோம். 18 ஆண்டுகாலம் அ.தி.மு.க கூட்டணியில் இருந்தாலும், அங்கு எப்போதும்போலஅடிமட்டத் தொண்டர்கள், சாதாரண மக்களின் குரல்கள் எடுபடவில்லை. எங்களுக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை. தலைமை எங்களின் கோரிக்கையைக் கேட்கக்கூடத் தயாராக இல்லை. அதோடு மட்டுமில்லாமல் தி.மு.க ஆட்சியில்தான் கட்டடத் தொழிலாளர்களுக்கு வாரியம் அமைக்கப்பட்டது. தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு கலைஞர்தான் தீர்வு கண்டார். எனவே, தி.மு.க-வோடு கூட்டணி அமைத்தோம். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டோம். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு சாதகமாக உள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்