கருணாநிதி... ஜெயலலிதா... வேட்புமனு ஃப்ளாஷ்பேக்!

1989-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக ஜெயலலிதா போட்டியிட்டார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு நடந்த அந்தத் தேர்தலில் ஜானகி அணி- ஜெயலலிதா அணி என அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா, எதிர்க் கட்சித் தலைவர் ஆனார். பிரிந்த அ.தி.மு.க அணிகள் ஒன்றிணைந்து 1991 தேர்தலைச் சந்தித்தன. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்தது அ.தி.மு.க. பர்கூர் தொகுதியில் வென்று முதல்வர் ஆனார் ஜெயலலிதா. 1996 தேர்தலில் பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா, அதற்கு முந்தையத் தேர்தலில் டெபாசிட் இழந்த சுகவனத்திடம் சுமார் ஒன்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் பர்கூரில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்தபோது உடன்இருந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டதால் 2001 தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. அவருடைய வேட்புமனு தள்ளுபடி ஆனதால்  தேர்தலில் நிற்கவில்லை. ஆனால் முதல்வர் ஆனார். பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவால் முதல்வர் பதவியைப் பறி கொடுத்தார். அதன்பிறகு டான்சி வழக்கில் விடுவிக்கப்பட்டு 2002-ல் நடந்த ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் 78,437 வாக்குகள் பெற்று ஜெயித்தார். 2006 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவர் வென்றாலும் அவர் கட்சி தோற்றுப் போனது. 2011 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது அந்த வட்டாட்சியர் இருக்கையில் அமர்ந்தபடியே, ஜெயலலிதாவிடம் வேட்புமனு வாங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்தபிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்தபோது அவருக்காக அந்த அலுவலகமே முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது. ஏஸி, டாய்லெட் வசதிகள் எல்லாம் செய்து புத்தம் புதிதாக மாற்றியிருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்