தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும்!

உதாரணம் சொல்லும் உம்மன் சாண்டி

கேரள சட்டசபைத் தேர்தல் மே 16-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்பாளர் பட்டியல் குறித்து டெல்லிக்கும் கேரளாவுக்குமாகப் பறந்துகொண்டிருந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டியை அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“சோலார் பேனல் மோசடியில் தொடர்பிருக்கிறது என சரிதா நாயர் உங்கள் மீது குற்றம்சாட்டி இருக்கிறாரே. வரும் தேர்தலில் இதனால் பாதிப்புகள் இருக்கும் என்று கருதுகிறீர்களா?”

“ஆட்சியின் கடைசி மூன்று வருடங் களாக இது குறித்துத்தான் எல்லோரும் விவாதிக்கிறார்கள். அண்மையில் மீண்டும் சரிதா நாயர் என்மீது மிகப் பெரிய குற்ற சாட்டை வைத்தார். வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுமாறு அவர் மனுக் கொடுத்தார். அதை நீதிபதி ரத்து செய்துவிட்டார். சரிதாவின் மனுவை நிராகரித்த நீதிபதி அவரைக் கண்டிக்கவும் செய்துள்ளார். எனக்கு எதிரான குற்றசாட்டுக்கு சிறு ஆதாரத்தைக்கூட எவரும் முன் வைக்கவில்லை. இது முழுக்க முழுக்க எதிர்க் கட்சியினரின் ஆதாரம் இல்லாத புகார்கள்தான். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மக்களை நாங்கள்  நம்பியுள்ளோம். மக்களின் தேவைகளை நிறைவேற்றியுள் ளோம். மீண்டும் மக்கள்ஆட்சி மலர எங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள்.

இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தற்போதைய அரசியல் சூழல் எங்கள் கூட்டணிக்குச் சாதகமாக உள்ளது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்