மாமண்டூர் ஜார்ஜ் கோட்டை... மெகா மேடையில் 234 நாற்காலிகள்!

தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - சார்பில் அரசியல் சிறப்பு மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரி மைதானத்தில் நடந்தது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆறு கட்சிகளின் தலைவர்கள் படங்களும் மேடையில் இடம்பெற்றிருந்தன.

 வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், விஜயகாந்த், ஜி.கே.வாசன், திருமாவளவன் என மாநாடு நடைபெறும் இடத்துக்கு ஒவ்வொருவராக வந்தனர். பிறகு, கல்லூரி அறையில் சற்று நேரம் விவாதித்துவிட்டு, 6.30 மணிக்கு வைகோவின் பிரசார வேனில் மேடைக்கு வந்தனர். தே.மு.தி.க இளைஞரர் அணிச் செயலாளர் சுதீஷ் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.  

“மாற்றத்துக்காக ஒன்று சேர்ந்துள்ளோம்!”

முத்தரசன்: “மக்கள் நலக் கூட்டணி நான்கில் இருந்து மூன்றாகும், மூன்றில் இருந்து இரண்டாகும் என்று பலர் ஆருடம் சொன்னார்கள். ஆனால், நான்கு ஐந்தாகி, ஐந்து ஆறாகி உள்ளது. தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் சாவு வீட்டுக்குக்கூட ஒன்றாக வரமாட்டார்கள். ஆனால், மாறி மாறி ஆட்சி நடத்துவதில் மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள்.” 

“கருணாநிதி, ஜெ. குற்றவாளிக்கூண்டில்...”

ஜி.ராமகிருஷ்ணன்: “நேற்று ஜெயலலிதா நடத்திய கூட்டம், ‘செத்தவன் கையில் கொடுத்த வெற்றிலை’ போல்  இருந்தது. ஆனால், இங்கே எழும் ஆரவாரத்தைப் பார்க்கும்போது, எங்கள் அணி கட்டாயம் வெற்றிபெறும் என்பது தெரிகிறது. ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. தி.மு.க தலைவரின் துணைவியார் மீதும், மகள் மீதும், பேரன்கள் மீதும், கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஊழலைத் தடுக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவோம் என்கிறார்கள். ஊழலுக்கு எதிராகப் பேச இங்குள்ள ஆறு கட்சிகளுக்கு மட்டும்தான் தகுதி உள்ளது.”

“விஜயகாந்த் முதல்வர் என்றால்...!”

திருமாவளவன்: “2016-ல் ஒரு புதிய மாற்றம் நிகழப்போகிறது. மாற்று அரசியல், மாற்று அரசியல் பாதை என்ற முழக்கத்தோடு வலுவான கூட்டணியை உருவாக்கினோம். எங்களைக் கிண்டல் செய்தார்கள், கேலி செய்தார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டோம். மக்கள் நலக் கூட்டணி தவறு செய்துவிட்டது என்கிறார்கள். விஜயகாந்த் முதல்வரானால் என்ன தவறு? நடிகர் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகலாம். அவருடன் நடித்த ஜெயலலிதா முதல்வர் ஆகலாம்? அவர்களைவிட தகுதி உடையவர் விஜயகாந்த். அவர் முதல்வர் ஆகக்கூடாதா?”

“நல்லவர்கள்... நாணயமானவர்கள்!”

ஜி.கே வாசன்: “நல்லவர்களை மக்கள் விரும்புகிறார்கள். நாணயமானவர்களை மக்கள் விரும்புகிறார்கள். இந்த மேடையில் இருப்பவர்கள் நல்லவர்கள், நாணயமானவர்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஒரு கட்சி ஆட்சி என்பது தமிழகத்தில் மாறும். குடும்ப ஆட்சி என்பது மாறும். எங்கள் ஆட்சியில் 6 தலைவர்கள் இருக்கிறார்கள். இதில் ஒருவர் தவறு செய்தால் மற்றவர்கள் தட்டிக் கேட்கலாம். அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஒருவர் தடம்புரண்டால் மற்ற 5 தலைவர்களும் தடுத்து நிறுத்துவார்கள்.”

“கேப்டன் கட்டுப்பாட்டில்...”

பிரேமலதா: “மக்கள் பிரச்னையை தன் பிரச்னையாகக் கருதி யார் ஒருவர் களத்திலே இறங்கிப் போராடுகிறாரோ, அவர்தான் முதல்வராக இருக்கமுடியும். பேய், பிசாசுகளிடம் மாறிமாறி ஆட்சியைக் கொடுக்க மக்கள் விரும்பவில்லை. தே.மு.தி.க-வில் இருந்து சென்ற சிலர், கேப்டனும் நானும் பல ஆயிரம் கோடி ஜெயலலிதாவிடம் வாங்கினோம் என்று சொல்கிறார்கள். கேப்டனின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்றும் அண்ணியின் கட்டுப்பாட்டில் கட்சி இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். என் அன்புக் கணவரின் கட்டுப்பாட்டில்தான் நான் இருக்கிறேன். அப்படி இருக்கும்போது, கட்சி எப்படி என் கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?”

“ஊழல் சொத்துக்கள் பறிமுதல்!”

வைகோ: “தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஊழல் மலிந்து கிடக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், லோக் ஆயுக்தா கொண்டுவருவோம். ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பகிங்கரமாக ஏலம் போடுவோம். இரண்டு கட்சிகளின் மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் என யாரும் தப்ப முடியாது. ஜெயலலிதாவுக்கு சாதகமாக நாங்கள் இருப்பதாகச் சொன்னவர்களை கீழ்ப்பாக்கம் மென்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்கள்.”

“நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்