கழுகார் பதில்கள்

 

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

கடைசி வரை நம்பிக்கொண்டு இருந்த ஜி.கே.வாசன், வேல்முருகன் ஆகியோரது நம்பிக்கை வீணாகிவிட்டதே?


யார் எவ்வளவு கொடுத்தாலும், எதற்காகக் கொடுத்தாலும் வாங்குபவர்கள் சிலர்தான் இருப்பார்கள். லாபக் கணக்கு மட்டுமே பார்க்கப்படுகிற அரசியலில் கொஞ்சமாவது நல்லது கெட்டது பார்க்கக் கூடிய ஒன்றிரண்டு பேரும் இருப்பார்கள் அல்லவா?

சம்பத்குமாரி, பொன்மலை.

ஜெயலலிதாவுக்கு எதிரான மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன், ‘சிறுதாவூர் பங்களாவில் கட்டுக்கட்டாகப் பணம் குவிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்பவர்கள் அதைப் பிடித்துக் கொடுக்கட்டுமே’ என்று சொல்லி இருக்கிறார். இது முரண்பாடாக இல்லையா?


தா.பாண்டியனைத் தெரிந்தவர்களுக்கு இது முரண்பாடாகத் தெரியாது. கட்சிக்குள் தனிக்கட்சி நடத்துவதும், தன்னிச்சையாகச் செயல்படுவதும் அவரது இயல்புதான். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்து தாய் கட்சியை முடிந்தவரை பலவீனப்படுத்தி முடித்துவிட்டு, சொந்தக் கடையும் ஓடாததால் மீண்டும் தாய்க் கட்சியில் தஞ்சம் அடைந்தவர் அவர். அங்கும் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்து மீண்டும் மாநிலச் செயலாளர் பதவியில் வெல்ல முடியாதவர் அவர். காலங்கள் கடந்தாவது, விமர்சனங்கள் இருந்தாலும் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஓர் அரசியல் கூட்டமைப்பைக் கட்டி அமைக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்த நிலையில் தா.பா. பேசியது முரண்பாடு. விஜயகாந்துக்கு எதிராகப் பேசினார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தா.பா-வுக்கு ஒரு மறைமுக அஜெண்டா இருப்பதாகவே பலரும் நினைத்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்