மிஸ்டர் கழுகு: ஜெ-வுக்கு எதிராக கனிமொழி!

‘‘எல்லாக் கட்சிகளும் உடைந்துகொண்டு இருக்கின்றன!” என்றபடியே கழுகார் உள்ளே வந்தார்.

‘‘தேர்தல் நேரம் என்றால், யார் யாரோ சேருவார்கள் என்றுதான் பார்த்திருக்கிறோம். இந்த அளவுக்குக் கட்சிகள் இதுவரை உடைந்தது இல்லை” என்றபடியே சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

‘‘தேர்தல் காலங்களில், தமிழக அரசியல் கட்சிகள் தி.மு.க அமைக்கும் அணியில் இருக்க வேண்டும்; அல்லது அ.தி.மு.க அமைக்கும் அணியுடன் இருக்க வேண்டும் என்பதுதான், கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. இதை, 2016 சட்டமன்றத் தேர்தல், அடியோடு மாற்றியது. மக்கள் நலக் கூட்டணியின் தோற்றமும், தனித்துப்போட்டி என்ற பா.ம.க-வின் உறுதியான நிலைப்பாடும் தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பங்களை உண்டாக்கின. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் குளறுபடி; கூட்டணி அமைப்பதில் இழுபறி; அமைக்கப்பட்ட கூட்டணியால் உள்கட்சி அதிருப்தி என்று ஏகப்பட்ட களேபரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதலில் ம.தி.மு.க-வும், அடுத்து தே.மு.தி.க-வும் த.மா.கா-வும் இந்த அதிர்வலைகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன”

‘‘ஆமாம்.”

‘‘மக்கள் நலக் கூட்டணி, தி.மு.க., பி.ஜே.பி என மூன்று பக்கங்களிலும் பேச்சுவார்த்தை நடத்திக்​கொண்டிருந்த விஜயகாந்த், யாரும் எதிர்பார்க்காத வகையில், மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து ‘விஜயகாந்த் அணி’யை உருவாக்கினார். இந்த அணியின் உருவாக்கம், தி.மு.க தொண்டர்களை மட்டுமல்ல, அதன் தலைமையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதைவிட அதிகமாக, தே.மு.தி.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் மிரண்டு போனார்கள். அவர்கள், கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுபோல், இந்த முறை தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் பெருவாரியான தொகுதிகளைப் பெற்று எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்று கனவில் இருந்தனர். அதற்காக நேர்காணலின்போதே  சீட் கேட்டு விஜயகாந்துக்கு மிகப்பெரிய தொகையை முன்பணமாக கட்டியிருந்தனர். ஆனால், விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்ததில், அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். வெளியில் சொல்லாமல் புழுங்கிக் கொண்டிருந்தவர்களை, குறிவைத்துத் தூக்கியது தி.மு.க.”

‘‘ம்”

‘‘தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகிய மூவருக்கும் முறையே ஈரோடு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி தொகுதிகள் உறுதியாகிவிட்டன. தி.மு.க-வில் சேர்ந்தால் தனியாகத்தான் போகவேண்டும், தனிக்கட்சி என்றால் நிறைய பேர் வருவார்கள் என்று தனிக்கட்சி ஐடியா துளிர்த்தது. ‘மக்கள் தே.மு.தி.க’ என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார்கள். விஜயகாந்த்தைத் திட்டுவதற்கு சந்திரகுமார் - பார்த்திபன் அணி பல முக்கிய தொகுதிகளுக்குச் செல்லுமாம்.”

‘‘த.மா.கா-வில்?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்