பெரியோர்களே... தாய்மார்களே! - 80

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

நீரும் நெருப்பும்’ படத்தின் வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கத்தில் நடந்தது. படத்தை வெளியிட்டுப் பேச அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வந்திருந்தார். படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.

இதோ கருணாநிதி பேசுகிறார்...

‘‘ஒரு பாத்திரம் நீர்... இன்னொரு பாத்திரம் நெருப்பு. நீர் கரைபுரண்டு போகாமலும் நெருப்பு காற்றிலே பரவிவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நெருப்பு புரட்சியின் சின்னம். நீர் அமைதியின் சின்னம். எம்.ஜி.ஆரை புரட்சி நடிகர் என்போம். அந்தப் புரட்சி நடிகர் பாத்திரத்துக்கு ஏற்ப நெருப்பு பாத்திரம் இருக்கிறது. எம்.ஜி.ஆரை பொன்மனச்செம்மல் என்போம். அந்தப் பொன்மனச் செம்மல் பாத்திரத்துக்கு ஏற்ப நீர் பாத்திரம் இருக்கிறது” என்று பேசினார் கருணாநிதி.

இவர்கள் இருவருமே நீரும் நெருப்புமாகத்தான் இருந்துள்ளார்கள். எம்.ஜி.ஆர். நெருப்பாக இருந்தபோது கருணாநிதி நீராக இருந்துள்ளார். கருணாநிதி நெருப்பாக இருந்தபோது எம்.ஜி.ஆர். நீராக இருந்துள்ளார்.

கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் விலகினார்களே தவிர, பிரிந்துவிடவில்லை.

கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் கட்சியில் இருந்தார்களே தவிர, எதிரிகட்சி ஆகிவிடவில்லை.

கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் சண்டை போட்டுக்கொண்டார்கள். ஆனால், எப்போதும் சமாதான மனநிலையிலும் இருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்