“எனக்கு மிரட்டல் வருகிறது!” - ஜெயலலிதாவை எதிர்க்கும் ‘நாம் தமிழர்’ தேவி...

மிழகமே கூர்ந்து கவனிக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் திருநங்கை தேவியை நிறுத்தி, அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது நாம் தமிழர் கட்சி. அந்த தேவிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தீவிர அரசியலுக்கு வருவதற்கான ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?’’

‘‘2009-ல் ஈழப் போர் நடந்த நேரத்தில், சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு  இருந்தேன். அப்போது, தமிழ் தேசம் மீது கொண்ட ஆர்வத்தினால் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டேன். 2016 தேர்தலில் கட்சி சார்பாக ஒரு திருநங்கையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அண்ணன் சீமான் நினைத்தார். பலரை அணுகிய பிறகு என்னிடம் கேட்டார். இது திருநங்கைகளுக்கு ஒரு நல்ல அடையாளமாக அமையும்  என்ற  நம்பிக்கையில் தீவிர அரசியலுக்கு வந்தேன்.”

“நாம் தமிழர் கட்சியை ஏன் தேர்வு செய்தீர்கள்?”

“தமிழ் மக்களுக்காகப் போராடணும், அவங்களுக்கு நல்லது செய்யணும் என்ற நோக்கம் எனக்கு இருந்தது. கட்சியில் சேருமாறு அண்ணன் சீமான் கேட்டுக் கொண்டார். கட்சி தான் என்னைத் தேர்வு செய்தது.”

“அரசியலுக்கு வருவதற்கு முன்பாக என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?”

“சென்னையில் இரண்டு வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, சேலத்தில் தாய்மடி அறக்கட்டளை என்ற பெயரில் முதியோர் இல்லம் ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 100 பேர் தங்கக்கூடிய இடம் அது. தெருவோர மக்களையும் ஆதரவற்றோரையும் காப்பாற்றும் நோக்கத்தில் அது ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.”

“எடுத்த உடனேயே முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கிறீர்களே?”

“வெற்றி பெறுவோமா, இல்லையா என்பதைத் தாண்டி, நாம் தமிழர் கட்சியை முன்னிறுத்தி நான் நிற்கிறேன். தமிழ் தேசியக் கட்சியை விரும்புவோரும், மாற்றம் தேவை என நினைப்போரும் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என நம்புகிறேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்