“மாலை கூட்டத்துக்கு காலையில் இருந்தே அடைத்து வைத்தனர்”

விருத்தாசலம் உச்சி வெயில் விபரீதம்!

ஜெயலலிதா நடத்திய வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் பரபரப்பு. என்ன நடந்தது என விசாரித்தோம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, காட்டுமன்னார் கோவில், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், கடலூர், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம்செய்து அ.தி.மு.க சார்பில் கடந்த 11-ம் தேதி, பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இங்குதான் முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தே.மு.தி.க கோட்டை என்கிறார்கள். அதை உடைத்தெறியும் வகையில்தான் இங்கு கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வேட்பாளரும் சுமார் 20 ஆயிரம் பேரையாவது கூட்டிவர வேண்டும் என்பது மேலிடத்தின் வாய்மொழி உத்தரவு. அதனால், ஒவ்வொரு கிளை மூலம் தலைக்கு 300 ரூபாய், மதிய உணவாக பிரியாணி என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி சுமார் ஒரு லட்சம் பேருக்குமேல் திரட்டினார்கள். ஜெயலலிதா எப்போது மேடைக்கு வருவார் என்றே தெரியாது. ஆனால், முதியோர்கள், சிறுவர்கள் என்று தயவு தாட்சண்யம் இல்லாமல் கூட்டி வந்தனர். அவர்களின் கைகளில் ஒரு சாப்பாடு பொட்டலம், வாட்டர் பாக்கெட் கொடுத்து காலை ஒன்பது மணிக்கே பட்டியில் அடைப்பதுபோல் அடைத்துவிட்டனர். சொன்னபடி பிரியாணியும் வழங்கவில்லை. காலையில் வண்டியில் வரும்போது வழங்கப்பட்ட பட்டை சாதமும், தண்ணீர் பாக்கெட்டும்தான் மாலை வரைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்