‘பெரியண்ணன்’ தனத்துடன் நடந்துகொண்டதா தே.மு.தி.க?

கூட்டணிக் கட்சிகள் அப்செட்

க்கள் நலக்கூட்டணி - தே.மு.தி.க அணிக்குள் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் ஏகப்பட்ட பிரச்னைகளும், குளறுபடிகளும் இருந்த தாகத் தகவல்கள் வந்துள்ளன. அதே நேரத்தில் த.மா.கா-வுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. டெல்டா பகுதியில் மட்டும் சில தொகுதிகளைக் குறிப்பிட்டு வாசன் கேட்டுள்ளார். அந்தத் தொகுதிகளை த.மா.கா-வுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவே 26 தொகுதிகள் எவை என்பதை ஜி.கே.வாசன் உறுதிப்படுத்திக் கொண்டார்.

அதன்பிறகு, தே.மு.தி.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்குள் குறிப்பிட்ட 20 தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் சிக்கல் நீடித்தது. ‘கம்யூனிஸ்ட்களின் கோட்டை’ என்று அழைக்கப்படும் மதுரை கிழக்குத் தொகுதியில், இரண்டு முறை நன்மாறனும், ஒரு முறை அண்ணாத்துரையும் வெற்றி பெற்றனர். தொடர்ச்சியாக மூன்று முறை சி.பி.எம் வென்ற இந்தத் தொகுதியை,  ‘மதுரை’ சென்டிமென்டில் விஜயகாந்த் கேட்டுள்ளார். இதே தொகுதியை  ம.தி.மு.க-வும் கேட்டது. இழுபறிக்குப் பிறகு, ம.தி.மு.க-வுக்கு  உறுதி செய்யப்பட்டது. திருப்போரூரை தே.மு.தி.க கேட்டது. மல்லுக்கட்டுக்குப்பின்,  மல்லை சத்யாவுக்காக அந்தத் தொகுதியைப் பெற்றுவிட்டது. ம.தி.மு.க-வின் செல்வாக்கான தொகுதி என கோவில்பட்டியை வைகோ  கேட்டார். சி.பி.ஐ அடம்பிடித்ததால் சி.பி.ஐ-க்கே அதை விட்டுக்கொடுத்தார் வைகோ. பூந்தமல்லியைப் பெறுவதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடதுசாரிகளுக்கும் கடுமையான போட்டி நிலவியது. வேளச்சேரி மணிமாறனுக்காக வேளச்சேரியை ம.தி.மு.க கேட்டது. அதை, விடுதலைச் சிறுத்தைகளும் கேட்டனர்.

பெரம்பூர் தொகுதியைப் பெறுவதில் சி.பி.எம் மற்றும் வி.சி.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நடந்தது. ஆலங்குடி தொகுதிக்கு தே.மு.தி.க-வும் ம.தி.மு.க-வும் கடுமையாக போட்டிபோட்டன. இறுதியில் ம.தி.மு.க-வே அதையும் எடுத்துக் கொண்டது. சென்னை எழும்பூர் தொகுதி தற்போது தே.மு.தி.க-வின் வசம் உள்ளது. தாங்கள் ஏற்கனவே வெற்றிபெற்ற அந்தத் தொகுதியை தே.மு.தி.க இந்த முறையும் கேட்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும் எழும்பூரை கேட்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்