எங்களைப் பார்த்து ‘ஷாக்’ ஆகுறாங்க!

மிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை ஏப்ரல் 11-ம் தேதி மாலையில் கும்மிடிப்பூண்டியில் தொடங்கிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இரவு 8.50 மணி அளவில் கொளத்தூர் தொகுதிக்கு வந்தார். கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். பிறகு, மைக் பிடித்த விஜயகாந்த், “எல்லோருக்கும் வணக்கம்... விடைபெறுகிறேன்” என்று சொல்ல... அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விஜயகாந்த் கிளம்புகிறார் என நினைத்து  கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் விஜயகாந்த்துக்கு மாலைகள் அணிவித்தனர். என்ன நினைத்தாரோ விஜயகாந்த் பேச ஆரம்பித்தார்.“கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆர்வத்தை யாரும் தடுக்க வேண்டாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்களை நான் பேச வந்திருக்கிறேன். அதை விவரமாகச் சொல்கிறேன். தயவுசெய்து அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இது தேர்தல் யுத்தம். தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கின்ற போர். யுத்தம் என்றாலும், போர் என்றாலும் ஒண்ணுதான்.
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ யாருன்னு சொல்ல முடியுமா? மு.க.ஸ்டாலின். இங்கு வந்து மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் சொல்றாராம்... ‘எனக்கும், விஜயகாந்துக்கும் சண்டை இல்லை’ என்று சொல்றாராம். சண்டை இல்லதான். விஜயகாந்துக்கு யார்கிட்டேயும் வருத்தமும் பயமும் கிடையாது. உண்மைகளைச் சொல்கிறேன். எனக்குப் பயம் கிடையாது. பொய் சொன்னாத்தான் பிரச்னைகள் வரும். ஆளுங்கட்சிக்காரங்க, கன்டெய்னர் லாரியில் கொண்டுசென்ற பணம், பொதுமக்களே உங்களுடையது. அதை வைகோ அண்ணன் சொன்னார். கேஸ் போடுங்கள் பார்ப்போம். கேஸ் போட முடியாது. உண்மை... உண்மை. உண்மையைச் சொல்வதால் என் மீது கேஸ் போட்டால் போடட்டும்.

எனக்குக் கொள்கை கிடையாது என்கிறார்கள். கொள்ளை அடிப்பது என்னுடைய கொள்கை அல்ல. என் கொள்கை, திட்டம்... ஊழலை, லஞ்சத்தை ஒழிப்பது. உணவு, உடை, இருப்பிடம் என மூணும் தர்றேன். இதைத்தவிர என் கொள்கையில் வேறு என்ன வேணும்?

காமராஜர் மட்டும்தான் படியுங்க என்று சொன்னார். குடிங்க, குடிங்கனு சொல்வது யார்? அய்யாவும், அம்மாவும். தமிழகம் கேவலப்பட்டுக்கொண்டு இருக்கிறது. பீகார் ஏறிக்கொண்டு இருக்கிறது. தமிழகம் இறங்கிக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் மக்களே. நத்தம் விசுவநாதன், ‘இந்தியாவில் எங்கேயாவது மதுவிலக்கு இருக்கிறதா’ன்னு கேட்கிறார். பீகாரில் சாராயம் காய்ச்சினால் மரணதண்டணை. அப்படி ஒரு சட்டம் இங்க போட முடியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்