“நக்ஸலைட்னு சொல்லி உள்ளே வெச்சுருவோம்!”

ஜெ. கூட்டத்தில் ஜூ.வி. கேமராமேனை மிரட்டிய போலீஸார்!

“உன் ஐ.டி கார்ட்டை பிடுங்கித் தூக்கிப் போட்டுட்டு, நீ நக்ஸலைட்னு சொல்லி உள்ள வெச்சுருவோம். நீ எங்க இருக்கன்னு உங்க ஆபிஸுக்கு கூடத் தெரியாமப் பண்ணிருவோம்” என ‘விசாரணை’ பட பாணியில் பத்திரிகை புகைப்படக்காரரைத் தாக்கி ‘வீரம்’ காட்டியுள்ளார் சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஒருவர்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவுத்திடல் மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-ம் தேதி மாலை தனது முதல் பிரசாரத்தைத் தொடங்கினார். அவர் பிரசாரத்தைப் படம் எடுக்க அனைத்து ஊடகங்களில் இருந்தும் ஏராளமான புகைப்படக்காரர்களும், செய்தியாளர்களும் தீவுத்திடல் மைதானத்துக்கு வந்திருந்தனர். மைதானத்தைச் சுற்றிலும் புகைப்படம் எடுத்தார் விகடன் புகைப்படக் கலைஞர் நிவேதன். அதைப் பார்த்த காவல் துறை அதிகாரி, “இதை ஏன் படம் எடுக்குற” என்று கேட்டுக்கொண்டே நிவேதனை பிடித்து அங்கிருந்த ஆய்வாளர் ஒருவரிடம் கூட்டிச் சென்றார். அந்த ஆய்வாளர், நிவேதனை அருகில் இருந்த பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்று, விசாரிக்கக்கூடச் செய்யாமல் நிவேதனின் கையை மடக்கி உள்ளார். மேலும், நிவேதனின் கேமராவைப் பறித்து அதில் இருந்த புகைப்படங்களைப் பார்த்த ஆய்வாளர், “உங்களுக்கு வேற வேலை இல்லையா, அம்மாவைப் பற்றி தப்பாச் செய்தி போடத்தான் அலையிறீங்க’’ என்று அ.தி.மு.க தொண்டரைப் போல ஆத்திரப்பட்டார். அருகில் இருந்த அ.தி.மு.க-வினரிடம் நிவேதன் கேமராவில் இருந்த புகைப்படங்களைக் காட்டி, “பாருங்கள் இவன் அம்மா கூட்டத்தை அசிங்கப்படுத்துற மாதிரி படம் எடுக்கிறான்” என்று அவர்களையும் உசுப்பேற்றி, ஆத்திரப்படவைத்தார். ஒரு கட்டத்தில் கோபத்துடன் கேமராவை கீழே போட்டார். ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில், குற்றவாளியைப் போல நான்கு காவலர்கள் நிவேதனிடம் இருந்த பணத்தையும், விகடன் நிறுவனத்தின் ஐ.டி கார்டையும் பறித்துக் கொண்டனர். மேலும்,  ஒரு குற்றவாளியைப் போல நிவேதனை செல்போனிலும் பல கோணங்களில் படம் எடுத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்