கிரிமினல் 'மக்கள் பிரதிநிதிகள்'!

மக்கள் ஆட்சி to கிரிமினல் ஆட்சி

ட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் கிரிமினல் பின்னணிகொண்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தேர்தலுக்குத் தேர்தல் கூடிக்கொண்டே போகிறது. இப்போது உள்ள தமிழக எம்.எல்.ஏ-க்களில் 70 பேர் மீது வழக்குகள் இருந்தன. 2006 சட்டசபைத் தேர்தலில் வென்றவர்களில் 77 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் தேர்தல் களத்தில் கோலோச்சுவது பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பார்ப்போம்.

தேர்தல் ஆணையத்தின் கமிஷனர்களும் சரி, முன்னாள் கமிஷனர்களும் சரி, தேர்தல் சீர்திருத்தத்தை எப்படியாவது அமல்படுத்தி அரசியலைச் சுத்தப்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றனர். அப்படித்தான் முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஜே.எம்.லிங்டோவும் பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்டில் தொடர்ந்தார். ‘‘எம்.பி-க்களாக இருக்கிற பல பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. எம்.பி-க்கள் மீதான வழக்கு என்பதால், விசாரணை நத்தை போல நடந்து வருகிறது. இந்த வழக்குகளை எல்லாம் விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்’’ என வழக்குத் தொடுத்தார் ஜே.எம்.லிங்டோ. இது 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரங்கேறியது. அப்போது இருந்த எம்.பி-க்களில் 162 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தை அறிந்து, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. அடுத்த நாடாளுமன்றமும் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்