கழுகார் பதில்கள்

எஸ்.எம்.சுல்தான், கோ.புதூர்.

 ‘மக்கள் நலக் கூட்டணி, இப்போது விஜயகாந்த் நலக் கூட்டணியாக மாறிவிட்டது’ என்கிறாரே பி.ஜே.பி தலைவர் இல.கணேசன்?


 ஓரளவு உண்மைதான்! இதுவரை மக்களுக்கு எத்தகைய மாற்றங்களைச் செய்யப் போகிறோம் என்று பேசிவந்த இவர்கள், தங்களது முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த்தை என்று அறிவித்தார்களோ அன்று முதல் அவர்களின் பேச்சே மாறிவிட்டது. ‘தமிழக முதலமைச்சர் ஆக விஜயகாந்த் எவ்வளவு தகுதியானவர், அதுவும் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைவிட எவ்வளவு தகுதியானவர், விஜயகாந்த் பேச்சு புரியுமா அல்லது கருணாநிதி பேச்சு புரியுமா? விஜயகாந்த் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்காதவர், கருணாநிதி துரோகம் செய்தவர், ஸ்டாலினுக்கு ஈழம் என்று சொல்லவே தெரியாது... சிலான் என்று தான் சொல்வார்....’ என்று மக்களுக்கு மிகமிக முக்கியமான தகவல்களைச் சொல்லி முறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். விஜயகாந்த் எதிர்பார்த்த மாற்றம் இதுதான். அவரைப் பற்றி பேச நல்ல பேச்சாளர்கள். அவர்களாகவே வந்து சிக்கிக்கொண்டார்கள்.

ச.கருணாகரன், தூத்துக்குடி.

 இதிகாசங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தங்களை இதிகாச நாயகர்களோடு ஒப்பிடுவது சரியா?


 நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். அவர்கள் சொல்லவில்லையே! மக்களிடம் காலம் காலமாகப் புழங்கும் கதைகளை உதாரணமாகக் காட்டுவது தவறு இல்லை என்று சொல்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். இதையே சுகிசிவம் சொன்னால் கதாகாலட்சேபம். கம்யூனிஸ்ட்டுகள் செய்தால் தத்துவார்த்தம்! அவர்களுக்கு விளக்கம் சொல்ல, சொல்லியா தர வேண்டும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்