பெரியோர்களே... தாய்மார்களே! - 81

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

பெங்களூர் சாம்ராஜ்நகரில் இரண்டு வீடுகள்!

ஒரு வீடு பேலஸ் மாதிரி பெரியது. இன்னொன்று அடக்கமான சிறிய வீடு. ஒரு வீட்டின் பெயர் ஜெய விலாஸ். இன்னொரு வீட்டின் பெயர் லலித விலாஸ்

ஜெய விலாஸில் இருந்த ஜெயமும், லலித விலாஸில் இருந்த லலிதமும் பிரித்துச் சேர்க்கப்பட்ட பெயர்தான் ஜெயலலிதா.

மைசூர் ராஜ குடும்பத்தின் பெயர்தான் ‘ஜெயா'. அதனால், ஜெயலலிதா மைசூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துவிட வேண்டாம். ஜெயலலிதாவின் தாத்தா, அதாவது அப்பாவின் அப்பா மைசூர் ராஜ குடும்பத்தின் மருத்துவர். அதனால் அவருக்கும் இந்த ‘ஜெயா' என்ற பெயரைப் பயன்படுத்திக்கொள்ள மன்னர் அனுமதி தந்திருந்தார். தனது மகனுக்கு ஜெயராம் என்று பெயரிட்ட ரங்காச்சாரியார் மகள்களுக்கு ஜெய ஸீதா, ஜெய லட்சுமி என்று பெயரிட்டார்.

இந்த ஜெயராமுக்கும் வேதா என்ற சந்தியாவுக்கும் பிறந்த மகள்தான் ஜெயலலிதா. இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் ஜெயகுமார். பேர் வைக்கும் போதே ‘ஜெயம்’ தொடங்கிவிட்டது.

ஜெயலலிதாவின் நடை, உடை, பாவனை, டாம்பீகம் எல்லாமே அப்பாவின் அப்பா டாக்டர் ரங்காச்சாரியார். ஜெயலலிதாவின் பூஜை, புனஸ்காரம், நம்பிக்கைகள், ஆன்மிகம் எல்லாமே அம்மாவின் அப்பா ரங்கஸ்வாமி அய்யங்கார். இரண்டு தாத்தாக்களின் குணாம்சத்துடன் வளர்ந்தவர்தான் இந்த அம்மா.

‘பேலஸ் மாதிரி வீடு, வீடு முழுக்க வேலைக்காரர்கள், எல்லாவற்றிலும் ஒரு பர்பெக்‌ஷன், ஹானஸ்ட், அப்ரைட் மேன்’ என்று டாக்டர் ரங்கச்சாரி பற்றி சொன்ன ஜெயலலிதா, ‘‘அவர் பழைய காலத்து அரிஸ்டோக்ராடிக் பர்பெக்‌ஷனிஸ்ட். அவர் கிட்ட இருந்தே குணங்களைப் பெற்றுள்ளேன்" என்றும் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்