“கல்வி அளிப்பது அரசின் கடமை... மதுவையும் லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும்”

நம் விரல்... நம் குரல்... கலந்துரையாடலில் மாணவர்கள் ‘தெறி’!

தேர்தல் விழிப்பு உணர்வு குறித்த விகடன் குழுமத்தின் ‘நம் விரல்... நம் குரல்’ கருத்தரங்கம் இப்போது, மாணவர்களுடன் கலந்துரையாடலாக மாறியிருக்கிறது. திண்டுக்கல்லில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களின் விவாதம் இது. ‘பொருளாதாரரீதியில் மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைப்பற்றி பலவிதமான கண்ணோட்டங்களில் உள்ளனர்.அதிலும் நடுத்தட்டு மக்களும், கீழ்த்தட்டு மக்களும் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? அரசியலில் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகளாக எதைக் கருதுகின்றனர்?’ என்பதுதான் விவாதத்தின் மையம்.

இந்த விவாதத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களின் பேச்சில் தெறித்த சில கருத்துச் சிதறல்கள் இங்கே...

‘‘அரசியல்வாதிகள் தங்கள் கட்சியின் குறைகள் பற்றி நினைக்காமல், பிற கட்சிகளின் குறைகளைத்தான் பேசுகின்றனர். அதைத் தவிர்த்து மக்களுக்கானக் குறைகளைத் தீர்த்து, நாட்டின் முன்னேற்றத்துக்காகச் செயல்படவேண்டும்.

கல்வி முறையில் மாற்றம் தேவை. இன்றுள்ள பிள்ளைகளுக்கு அடிப்படைக் கல்வி அளிப்பது அரசாங்கத்தின் கடமை. குளிர்சாதன வசதி உள்ள பள்ளி அறைகள் தேவையில்லை, ஸ்மார்ட் கிளாஸ் தேவையில்லை. தரமான கல்வியைக் கொடுக்கத் தேவையான  திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.’’

‘‘ஏற்கனவே இருக்கும் சட்டங்களை அரசாங்கம், முறையாகப் பயன்படுத்த வேண்டும். தண்டனைகள் அதிகரித்தால் குற்றங்கள் குறையும். தேர்தலில் ஜெயிக்க வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, ஓட்டுரிமையைப் பறித்துக் கொள்கின்றனர்.மக்களைத் தனித்தன்மையோடு முடிவெடுக்கவிடாமல், அவர்களை அரசியல்வாதிகள் அடிமைகளாக வைத்திருக்கின்றனர். உண்மையில், மக்கள் யாரும் இலவசங்களை எதிர்பார்ப்பது கிடையாது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்