“தொகுதி பக்கம் ஜெயலலிதா வரவில்லை!”

முதல்வரை எதிர்க்கும் சிம்லா முத்துச்சோழன்

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க சார்பில் சிம்லா முத்துச்சோழன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள். வி.வி.ஐ.பி அந்தஸ்து பெற்ற தொகுதி என்பதால் சிம்லா முத்துச்சோழன் மீது அனைவரின் கவனமும் குவிந்திருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”

“தொகுதி மக்களிடையே எனக்கு நல்ல அறிமுகம் உள்ளது. மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட போதிலும், அத்தை சற்குணபாண்டியன் கூடவே இருந்ததால் எனக்கு அரசியல் அனுபவங்கள் இருக்கின்றன. அவர் கட்சிக் கூட்டங்களுக்கு செல்லும்போது நான்தான் கார் ஓட்டுவேன். அவர்களுடன் சேர்ந்து பல இயக்கங்களில் கலந்துகொண் டுள்ளேன். இதனால், எனக்குக் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்போது, ஜெயலலிதாவுக்கு எதிராக என்னைக் களமிறக்கியது, கட்சித் தலைமை கொடுத்த வாய்ப்பாகக் கருதுகிறேன். என்மீது நம்பிக்கை வைத்து தலைவர் கலைஞரும், தளபதியும், கனி அக்காவும் இந்தத் தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இந்தத் தொகுதியின் வெற்றியை அவர்களது காலடியில் சமர்ப்பிப்பேன். இது என்னுடைய அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தருணம். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“ஆர்.கே. நகரில் அ.தி.மு.க தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளதே?”

“தொகுதியில் ஜெயலலிதா உட்பட அவருக்கு முன்பு இருந்த எந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் மக்களுக்கு எந்தவிதத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தொகுதிப் பக்கம்கூட ஜெயலலிதா வரவில்லை. மழை, வெள்ளத்தின் போது பிரசார வேனில் வந்த அவர், தெருவில் இறங்கி மக்களைச் சந்திக்கவில்லை. அ.தி.மு.க மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. தொகுதியின் வளர்ச்சி , 15 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் உள்ளது. என்னுடைய மாமியார் சற்குணபாண்டியன் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராக இருந்த காலத்தில் கொருக்குப்பேட்டை பாலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. தி.மு.க காலத்தில்தான் பட்டேல் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. நான் வெற்றி பெற்றால், இந்தத் தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன்.”

“அ.தி.மு.க தவிர மக்கள் நலக் கூட்டணி, பி.ஜே.பி, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளனவே?”

“அவர்கள் எல்லோரும் போட்டியாளர்கள். எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் தேர்தல் ரேஸில் கலந்து கொள்கிறார்கள். ஆனால், இறுதியில் தி.மு.க-தான் இங்கு வெற்றி பெறும். நான்தான் எம்.எல்.ஏ-வாக சட்டசபைக்குச் செல்வேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்