பிசினஸ் பினாமிகள்!

அரசியல் தொழிலில் எல்லாமே அடக்கம்!

ந்திக்க முடியாத முதலமைச்சர், அதிகாரமற்ற அமைச்சர்கள், திட்டங்களற்ற அதிகாரிகள் இணைந்து நடத்திய அரசாங்கத்தில்,மக்கள் பல பிரச்னைகளைச் சந்தித்தனர். கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து நிலவிய இந்தச் சூழல், பல தொழில் முதலீடுகளை தமிழகத்தைவிட்டு வெளியேற்றியது. ஆனால், இவ்வளவு அசாதரணச் சூழலையும் சமாளித்த சில நிறுவனங்கள், தொழிலதிபர்கள், கான்ட்ராக்டர்கள் கோடிகளைக் குவித்தனர். காரணம், கார்டனின் கருணைப்பார்வை ஒன்றுதான். கடந்த 5 ஆண்டு அ.தி.மு.க அரசாங்கத்தில், பரபரப்பாகச் செயல்பட்டு, கோடிக்கணக்கில் லாபம் குவித்ததாகச் சிலரை அடையாளம் காட்டுகிறார்கள்!

என்ஜினீயரிங் நிறுவனம்

2006-ம் ஆண்டு 25 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த  என்ஜினீயரிங் நிறுவனம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பை வடிவமைத்தல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனம்தான், சென்னை மாநகராட்சி தவிர்த்து, தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என பட்டிதொட்டி வரை எலெக்டிரிக்கல் பொருட்களை சப்ளை செய்து வருகிறது.  கடந்த 5 ஆண்டுகளில், எல்.இ.டி பல்புகள் பொருத்துதல், மின்விளக்குகளை மாற்றி அமைத்தல், எலெக்ட்ரிக்கல் சாதனங்களைப் பொருத்துதல் போன்ற வேலைகளும், இந்த நிறுவனத்துக்கே ஏகபோகமாகக் கொடுக்கப்பட்டன. மதுரையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் ஒரு சில வேலைகளை எடுத்துச் செய்திருந்தாலும் அவையும் இந்த என்ஜினியரிங் நிறுவனத்தின் துணையுடன் செயல்பட்டவையே. இந்த நிறுவனம்2006-ம் ஆண்டு  தொடங்கப்பட்டிருந்தாலும் அதன் அசுர வளர்ச்சி 2011-க்குப் பிறகுதான் தொடங்குகிறது. தமிழக அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வேலுமணி ஆகியோரின் ஆசி இந்த நிறுவனத்துக்குப் பூரணமாக இருந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்