பழைய பேப்பர் - எனதருமை வாக்காளப் பெருமக்களே!

2011 சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க-தான் ஆட்சியில் இருந்தது. அந்தத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா என்ன பேசினார்? 2011 சட்டசபை தேர்தல் நேர பழைய பேப்பர்களைப் புரட்டினோம். கருணாநிதி ஆட்சியின் சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு, கடன் சுமை, கட்டப் பஞ்சாயத்து, மின்வெட்டு என சகலத்தையும் சகட்டுமேனிக்கு பேச்சில் பந்தாடினார் ஜெயலலிதா.

அவருடைய  உரையை இப்போது படித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதாவின் அந்த உரை அப்படியே இந்த ஆட்சிக்குப் பொருந்துகிறதா என்பதை யூகத்திற்கே விட்டுவிடுகிறோம். சிரிக்காமல் அவரது உரையைப் படியுங்கள். 

‘‘இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்காக நடைபெறுகின்ற சாதாரணத் தேர்தல் அல்ல. உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் தேர்தல். அடிமைத்தனத்தில் இருந்து, உங்களை விடுவிப்பதற்காகவே நடைபெறுகின்ற தேர்தல். ‘தமிழ்நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோரிக்கையோடு உங்கள் முன்னே வந்திருக்கிறேன். ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்புதான் இந்தத் தேர்தல். தமிழ்நாட்டை சூறையாடி உலகப் பெரும் பணக்காரர்களாக மாறி இருக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

கடுமையான மின்வெட்டு; யாரும் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்கும் விலைவாசி; ஊருக்கு ஊர் ரவுடி சாம்ராஜ்ஜியம்; மணல் கொள்ளை; எதைத் தொட்டாலும் ஊழல்; சுதந்திரமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்ற அக்கிரமம்; அடிதடி; கட்டப் பஞ்சாயத்து; என்று என்னென்ன சமூகத் தீமைகள் உண்டோ அவை அனைத்தும் தலைவிரித்து ஆடும் சூழ்நிலை நிலவுகிறது. இந்தத் தேர்தல் மூலம்  தமிழ்நாட்டை மீட்டெடுக்கவில்லை என்றால் வேறு எப்போது தமிழ்நாட்டை மீட்கப் போகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்