கழுகார் பதில்கள்

அ.அப்துல்காதர், பழைய பெருங்களத்தூர்.

 ‘தி.மு.க-வை வளர்க்க ஒவ்வொருவரும் ஸ்டாலின்போல் உழைக்க வேண்டும்’ என்கிறாரே, கருணாநிதி?


 அவரும்தானே?

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று, திராவிடக் கட்சி அல்ல... நாம் தமிழர் கட்சிதான்’ என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சொல்லி இருக்கிறாரே?

 அப்படிச் சொல்லும் தகுதி நாம் தமிழர் கட்சிக்கு இருப்பதை இந்தத் தேர்தலில் சீமான் நிரூபிக்க வேண்டும். பெரிய கட்சிகள்கூட கூட்டணிக்கு மற்ற கட்சிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது தனித்துப் போட்டியிடும் சீமானின் முடிவு பாராட்டுக்கு உரியது. ஆனால், கவனத்தில்கொள்ளத் தக்கதா என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் நிரூபிக்கும்.

எம்.ஜி.ஆர்.மனோகரன், கரூர்.

 மீண்டும் செந்தில்பாலாஜிக்கு போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளதே?


  செந்தில்பாலாஜி விஷயத்தில் மட்டுமாவது அ.தி.மு.க தலைமைக் கழகம் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடலாம். எதற்காக அவர் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது, எதற்காக அவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டது, அவருக்கு மீண்டும் வாய்ப்பை வாங்கித்தந்தது யார், அவரது நடவடிக்கைகளுக்கு நற்சாட்சிப் பத்திரம் கொடுத்தது யார் என்பதை விளக்குவதாக அந்த அறிக்கை அமைந்தால், அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் பின்பற்ற வசதியாக இருக்கும்.

த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்.

 மலிவான விளம்பரங்கள் மலிந்துவிட்டனவே?


 மலிவான வெற்றிகளுக்கு இதுதான் அடிப்படை என்று கருதப்படுவதால், மலிவான விளம்பரங்கள் அதிகம் ஆகிவிட்டன.  மலிவான விளம்பரங்கள் காற்றடைத்த பலூன்களாகக் கண்ணுக்குத் தெரியாமல் இறங்கும் என்பதை யாரும் உணர்வது இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்