மிஸ்டர் கழுகு: “என்னையே ஏமாத்துறீங்களா?”

23 வேட்பாளர்களுக்கு கல்தா! - இன்னும் எத்தனை பேர்?

ழுகார் உள்ளே நுழையும்போது நம் முன் ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் இருந்தது. அதைப் பார்த்து மெல்லச் சிரித்த கழுகார், ‘‘ஏழாவது முறையாக வேட்பாளர்களை மாற்றிவிட்டாரா ஜெயலலிதா? இதுவரை வந்துள்ள அறிவிப்பையும் சேர்த்தால் மொத்தம் 23 வேட்பாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். மூன்று வேட்பாளர்களின் தொகுதியை மாற்றி உள்ளார் ஜெயலலிதா” என்றபடியே ‘நமது எம்.ஜி.ஆரை’ எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு நம்மைப் பார்த்தார்.

‘‘என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வில்? ஏப்ரல் 29-ம் தேதி வேட்புமனுத் தாக்கல்செய்ய கடைசி நாள். அன்றைய தினம் வரை இன்னும் எத்தனை வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றப்போகிறாரோ?” என்ற கேள்வியைப் போட்டோம்.

“இப்போது உள்ள வேட்பாளர்களில் 41 பேரைப் பற்றிய புகார்கள் ஆதாரத்துடன் வந்து குவிந்துள்ளனவாம். போயஸ் கார்டன் ஃபேக்ஸ் மிஷினில் பேப்பர் வைத்து மாளவில்லை என்பதால், அந்த லைனையே பாதி நேரம் அணைத்து வைத்துவிட்டார்களாம். கூரியரில் மலை அளவு தகவல்கள் தினமும் வந்துகொண்டே இருக்கிறதாம். சொந்தக் கட்சிக்காரர்களையே மதிக்காதவர்கள், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், முறைகேடுகள் செய்தவர்கள், எதிர்க் கட்சியினரோடு தொடர்பு வைத்துக்கொண்டு இருப்பவர்கள், அந்தத் தொகுதிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள், அமைச்சர்களின் பினாமிகள், பணம் கொடுத்து சீட்டு வாங்கியவர்கள்... என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் இந்தப் பட்டியலில் இருக்கிறார்களாம். இதனை அருகில் இருந்து உணர்ந்த உள்ளூர் கட்சிக்காரர்கள்தான் இந்தப் புகார்களை அனுப்புகிறார்களாம்.”

‘‘நிலமோசடி, ஊழல், கடத்தல், பாலியல், ரவுடிகள் தொடர்பு, கஞ்சா... ஆகிய புகார்களில் சிக்கிய அ.தி.மு.க வேட்பாளர்களின் இ.பி.கோ பட்டியலை நமது நிருபர்கள் எழுதி வந்தார்களே... மினி தொடர்போல!”

‘‘அந்தத் தகவல்கள் அனைத்துமே தோட்டத்துக்கு வந்துவிட்டன. அவற்றை பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ச்சிசெய்து வருகிறது ஒரு டீம். மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள், கட்சி வி.ஐ.பி-க்கள் என்று யாரையும் ஆலோசிக்காமல், முழுக்க முழுக்க உளவுத்​துறையினரின் ஒத்துழைப்​போடு ஜெயலலிதா தயாரித்த வேட்பாளர் லிஸ்ட் என்று இதனைச் சொல்கிறார்கள். இப்படி உளவுத்துறையிடம் கேட்கிறார்கள் என்றதும், உள்ளூர் உளவுத்துறை போலீஸ்காரர்களை லோக்கல் கட்சிக்காரர்கள் வளைத்ததாகவும் தங்களுக்குச் சாதகமான ரிப்போர்ட் அனுப்பக் கவனிப்புகளைச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஐவர் அணியோ, கட்சிப் பிரமுகர்களோ ஆட்களை பரிந்துரை செய்தால், மோசமான ஆட்கள் வந்துவிடக்கூடும் என்பதால், உளவுத்துறையிடம் சொல்லி இருக்கிறார் முதல்வர். ஆனால், அதைவிட மோசமான பட்டியலை உளவுத்துறை தயாரித்து விட்டது என்ற கோபத்தில் கொந்தளித்து விட்டாராம் முதல்வர். 41-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது புகார் என்றதும் கோபமான ஜெயலலிதா, ‘என்னையே ஏமாத்துறீங்களா?’ என்று சினந்தாராம். அனைத்து வேட்பாளர்களைப் பற்றியும் மறுபடியும் விசாரணை நடத்து​வதற்கு உத்தரவு போட்டுள்ளாராம்.”

‘‘ஓஹோ!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்