அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாற்றம்! - பின்னணி என்ன?

ட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை மாற்றிவருகிறார் முதல்வர் ஜெயலலிதா. வேட்பாளர்கள் மாற்றம் தொடரும் என்று தகவல்கள் வருகின்றன. இதில் தி.மு.க வேட்பாளர்களும் தப்பவில்லை. வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருப்பதுதான் பரிதாபமாக இருக்கிறது.

தமிழ்மகன் உசேன்

பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்மகன் உசேனை மாற்றிவிட்டு, ஹைதர் அலியை வேட்பாளராக அறிவித்து உள்ளார் ஜெயலலிதா. வெளியூர்க்காரர் என்பதால், தமிழ்மகன் உசேனுக்கு உள்ளூர் அ.தி.மு.க-வினர் தேர்தல் வேலைகள் செய்யாமல் ஒதுங்கியே இருந்தனர். அவரை மாற்றக்கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் கடுப்பான தமிழ்மகன் உசேன், ‘நான் அம்மாவிடம் நேரடியாகப் பேசுபவன். எனக்குத் தேர்தல் வேலை செய்யாவிட்டால் கார்டனில் புகார் செய்வேன்’ என்று மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில், ம.தி.மு.க வேட்பாளரான நிஜாமும், தமிழ்மகன் உசேனும் சாலையில் நேருக்குநேர் சந்தித்துக்கொண்டனர்.

இந்தச் சூழலில், தமிழ்மகன் உசேன் மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. மாற்றப்பட்டதற்குக் காரணம், அவரது அதிரடிப் பேச்சா... ம.தி.மு.க வேட்பாளருடன் சந்திப்பா... உள்ளூர் கட்சிக்காரர்களின் எதிர்ப்பா? என பாளையங்கோட்டையில் ஒரு பட்டிமன்றமே நடந்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்