“ஊழலில் முதலிடம் தமிழகம்!”

அமித்ஷா தாக்கு

“முத்ரா வங்கிக்கடன் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம், உட்பட மத்திய அரசால் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. ஆனால், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் அந்தத் திட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டுவர முடியாத நிலை உள்ளது” என்று குற்றம்சாட்டுகிறார் பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில்நடைபெற்றது.

பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித்ஷா, மாநிலத் தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன், பியூஸ் கோயல், பி.ஜே.பி-யின் தேசியப் பொதுச் செயலர் முரளிதரராவ், தேசியச் செயலாளர் எச்.ராஜா, தேசியச் செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், கூட்டணிக் கட்சித் தலைவர்களான இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், நடிகர் விஜயகுமார், மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் சதக்கத்துல்லா, கொங்கு நாடு ஜனநாயகக் கட்சித் தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய அமித்ஷா, “தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகியவை ஊழலில் திளைத்த கட்சிகள். இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மீது 2ஜி அலைக்கற்றை வழக்கு, வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவித்த வழக்கு, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு, அமலாக்கப் பிரிவு வழக்கு என பல வழக்குகள் உள்ளன. இந்தக் கட்சிகள் செய்த ஊழல்கள் காரணமாக தமிழகத்தின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது. ஆனால், அந்தச் சாதனைகள் தமிழக மக்களைச் சென்றடைவதில் சிரமங்கள் உள்ளன. குறிப்பாக, மத்திய எரிசக்தித் துறையின் உதய் திட்டத்தின் மூலம் பல்வேறு மாநிலங்கள் பயனடைந்து உள்ளன. ஆனால் இதை, தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசுக்குச் சிரமம் உள்ளது. தமிழக அரசு  முடிவெடுக்கத் தாமதம் செய்வதால் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இங்கு தொடங்கப்படுவதைத் தள்ளிப்போட வேண்டியதாகிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்