பெரியோர்களே... தாய்மார்களே! - 82

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

சென்னை சட்டக் கல்லூரியில் வைத்துத்தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன் முதலாகச் சந்தித்தனர். இரண்டு பேருமே சட்டம் படித்தவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். சென்னை சட்டக் கல்லூரியின் ஆண்டு விழாவில் பரதநாட்டியம் ஆட 12 வயதில் ஜெயலலிதா வந்திருந்தார். அன்றைய சிறப்பு அழைப்பாளர் எம்.ஜி.ஆர்.

அந்த விழாவில் மிமிக்ரி செய்த ஒரு பையனின் நடிப்பு எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போக, உடனே தான் கட்டியிருந்த கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பையனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்துவிட்டார். அடுத்தது ஜெயலலிதாவின் நாட்டியம்.அதிலும் எம்.ஜி.ஆர். தனது மனதைப் பறிகொடுத்தார். ஆனால், ஜெயலலிதாவுக்குக் கொடுக்க  அவரிடம் எந்தப் பொருளும் இல்லை. உடனடியாக ஒரு வெள்ளிக் கோப்பையை வாங்கி வரச் சொல்லி அதை ஜெயலலிதாவுக்குக் கொடுத்துவிட்டுப் போனார்.

நான்கு ஆண்டுகள் கழிந்திருக்கும், ஜெயலலிதாவுக்கு 16 வயது. 'வெண்ணிற ஆடை' படத்தில் நடிக்கிறார். அவரை இயக்குநர் பந்துலு பார்க்கிறார். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். ஆயிரத்தில் ஒருவனின் அடிமைப் பெண் ஆகிறார் ஜெயலலிதா.

ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய், முகராசி, சந்திரோதயம், தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், அரசகட்டளை, காவல்காரன், ரகசிய போலீஸ் 115, தேர்த் திருவிழா, குடியிருந்த கோயில், கண்ணன் என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு, காதல் வாகனம், அடிமைப்பெண், நம் நாடு, மாட்டுக்கார வேலன், என் அண்ணன், தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், ராமன் தேடிய சீதை, அன்னமிட்ட கை, பட்டிக்காட்டு பொன்னையா - என்று 1965 முதல் 1973 வரை எட்டு ஆண்டு காலத்தில் 28 படங்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்