மாற்றத்தை தி.மு.க. மட்டுமே தரமுடியும்!

அதிரடிக்கிறார் ஜவாஹிருல்லா

னிதநேய மக்கள் கட்சி, 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த முறை, தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது. கூட்டணியில் ம.ம.க-வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திடீரென அதில், ஒரு தொகுதியை தி.மு.க-வசமே கொடுத்துவிட்டது ம.ம.க. தொகுதிகள் அதிகம் கேட்டு அடம்பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் வித்தியாசம் காட்டியிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“2011 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி, இந்தத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி என உங்கள் நிலைப்பாட்டுக்கும், அணி மாற்றத்துக்கும் காரணம் என்ன?”

“கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தபோது அடுத்துவந்த உள்ளாட்சித் தேர்தலில், ஜெயலலிதாவின் அணுகுமுறை மாறியது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்குவார்கள் என்று நினைத்தோம். ஆனால், கடைசி நேரத்தில் ‘நீங்கள் தனியாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டார்கள். அதன்பிறகு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முதல், ராஜ்யசபா தேர்தல் வரை  தி.மு.க-வுக்குதான் ஆதரவு தெரிவித்தோம். அதன் தொடர்ச்சியாகத்தான் வரும்  சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கைகோத்திருக்கிறோம். ஜெயலலிதா எப்போதுமே, எதிர்க் கட்சியாக இருக்கும்போது சந்திக்கும் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை வலிய அழைப்பார். ஆளும் கட்சியாக இருக்கும்போது கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்திவிடுவார். அதன்மூலம் அடுத்து வரும் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைவதும் வழக்கம். கூட்டணிக் கட்சிக்கான எந்தத் தொகுதிப் பங்கீட்டையும் அ.தி.மு.க-விடம் எதிர்பார்க்க முடியாது. இந்தத் தேர்தலில் சில கட்சிகளுடன் அவர் கூட்டணி வைத்திருந்தாலும், அனைத்து இடங்களிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால், அது கூட்டணியே இல்லை.”

“ம.ம.க-வில் ஒரு பிளவு ஏற்பட்டபின் தேர்தலைச் சந்திக்கிறீர்கள். உங்களிடம் இருந்து பிரிந்தவர்களுடன் நேரடி போட்டி வேறு உள்ளது. இது உங்களுக்குச் சிக்கல்தானே?”

“ம.ம.க-வில் பிளவு எதுவும் இல்லை. 25 சதவிகிதம் உறுப்பினர்கள் பிரிந்தால்தான் அது பிளவு. ஆனால் இரண்டு சதவிகிதம் பேர்தான் பிரிந்துள்ளார்கள். இதனால், எங்கள் கட்சியின் வலிமை எந்த வகையிலும் குன்றவில்லை. நாங்கள் போட்டியிடும் நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்.”

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்