சென்ற இடமெல்லாம் வெறுப்பு! - அச்சத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்

‘போகலைன்னா அம்மா திட்டுவாங்க... போனால் மக்கள் திட்டுறாங்க’ என்று இருதலைக்கொள்ளி எறும்புபோல தவிக்கிறார்கள் அ.தி.மு.க வேட்பாளர்கள்.

சம்பவம்-1

கடந்த 18-ம் தேதி மாலை தன்னுடைய மதுரை மேற்குத் தொகுதியில் முதல்கட்ட பிரசார நிகழ்ச்சியை  சோலைஅழகுபுரத்தில் தொடங்கினார் அமைச்சர் செல்லூர்ராஜு. அந்தப் பகுதி முழுவதும் வாழை மரங்கள், கொடி, தோரணங்கள் கட்டி பிரமாண்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க-வினர் செய்திருந்தனர்.

அமைச்சரும் அங்கு செய்திருந்த பிரமாண்ட ஏற்பாடுகளைப் பார்த்து குஷியாகி, கட்சியினருடன் சோலைஅழகுபுரம் 1 மற்றும் 3-வது தெருக்களில் ஓட்டு கேட்கச் சென்றார்.

அமைச்சர் வருவதைத் தெரிந்துகொண்ட மக்கள், தெருக்களில் குழுமி இருந்தனர். நம்மை ஆரத்தி எடுக்கத்தான் பெண்கள் குழுமி இருக்கிறார்கள் என்று நினைத்தபடியே அவர்கள் அருகில் சென்ற செல்லூர்ராஜுவை ஹோவென்று சத்தம் போட்டபடி, பெண்கள் சுற்றி வளைத்துவிட்டனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் முகம் வியர்த்துவிட்டது. “நீங்க ஓட்டு வாங்கிப்போய் அஞ்சு வருஷமாச்சு. இப்பத்தான் எங்களைப் பார்க்க கண் தெரிஞ்சுதா... சரியான ரோடு, குடிதண்ணீர் எந்த வசதியும் இல்லாமல் தினமும் கஷ்டப்படுறோம். எத்தனைமுறை இது சம்பந்தமா உங்ககிட்டே முறையிட்டிருப்போம். ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்களா?” என்று ஆளாளுக்கு கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாமல் பம்மினார் செல்லூர். அதற்குள் பெண்கள், காலிக் குடங்களை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி வர, ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து எஸ்கேப்பாகி அடுத்த சந்துக்குள் நுழைந்தார். அதற்குள் போலீஸார் அவருக்குப் பாதுகாப்பாக வர ஆரம்பித்தனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சிக் குள்ளான செல்லூர்ராஜு, ‘என்னைய மாட்டி விடுறதுக்குன்னே இப்படி பண்ணினீங்களா?’ என்று கட்சி நிர்வாகிகளைக் கடிந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்