தேர்தல் கமிஷன் அன்றும் இன்றும்!

கருணாநிதிக்கு அப்படி... ஜெயலலிதாவுக்கு இப்படி!

‘தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறது... எதிர்க் கட்சிகளின் புகார்களைப் புறக்கணிக்கிறது’ என்கிற புலம்பல்களும் புகார்களும் எழுந்துநிற்கின்றன. அதன் நடுநிலைத் தன்மை சோதிக்கப்படுகிறதா? 2011 தேர்தலில் கமிஷன் காட்டிய அதிரடிகளும் ஆச்சர்யங்களும் இப்போது நினைத்தாலும் நடுங்கவைக்கின்றன. அன்று தேர்தல் கமிஷன் ஆடிய ‘கில்லி’ ஆட்டங்களின் ஃபிளாஷ்பேக் இது.

டி.ஜி.பி லத்திகா சரண்!

‘‘ஆளும் கட்சியான தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படும் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்களை மாற்ற வேண்டும்’’ எனப் புகார் கொடுத்தது, அப்போதைய எதிர்க் கட்சியான அ.தி.மு.க. இதில் டி.ஜி.பி லத்திகா சரணின் தலை உருண்டது. ‘எதற்கு சங்கடம்’ என நினைத்து, 52 நாட்கள் விடுமுறையில் போய்விட்டார் லத்திகா சரண். லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி-யான போலோநாத்தை தேர்தல் பாதுகாப்பு டி.ஜி.பி-யாக நியமித்தது தேர்தல் கமிஷன்.

டி.ஜி.பி போலோநாத்!

தேர்தல் பாதுகாப்புப் பணிகள் முழுவதையும் நேர்மையாகப் பார்த்துக்கொண்டார் போலோநாத். டெல்லியில் தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷியிடம், ‘பாதுகாப்புப் பணிக்குக் கூடுதலாக 3 ஆயிரம் துணை ராணுவப் படை வேண்டும்’ என்றார். அதைத் தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டது. ‘அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை’ என போலோநாத் சொல்ல... கோபம் அடைந்த ஆளும் தி.மு.க., ‘‘போலோநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கமிஷனிடம் புகார் கொடுத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்