எங்கள் நோக்கம் அ.தி.மு.க-வை வீழ்த்துவதுதான்!

மக்கள் தே.மு.தி.க. சந்திரகுமார் அதிரடி

‘‘தமிழக மக்கள், ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த ஆட்சி மாற்றத்தை தி.மு.க-வால் மட்டுமே கொண்டுவர முடியும்’’ என்கிறார் தே.மு.தி.க-வில் இருந்து பிரிந்து மக்கள் தே.மு.தி.க-வை உருவாக்கிய சந்திரகுமார்.

‘‘கூட்டணிக்கு வராத கோபத்தில், தே.மு.தி.க-வை உடைக்க தி.மு.க போட்ட திட்டத்துக்கு நீங்கள் துணை போனதாகச் சொல்கிறார்களே?’’

‘‘தே.மு.தி.க-வை உருவாக்குவதற்கு நானும் பாடுபட்டவன். அதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்காததால் நானும் பாதிக்கப்பட்டவன். தேர்தல் சம்பந்தப்பட்ட எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் என்னைக் கடைசியாக உட்காருங்கள் எனக் கூறுவார்கள். அப்போதெல்லாம் நான் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு வருத்தப்பட்டிருக்கிறேன். அவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும், தே.மு.தி.க-வுக்கு எதிராகப் போட்டி தே.மு.தி.க-வை உருவாக்குவதோ, சின்னத்தை முடக்குவது போன்றோ மலிவான, கீழ்த்தரமான வேலைகளைச் செய்ய மாட்டோம். இது தவறான கருத்து.’’

‘‘கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிடும்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?’’

‘‘என் தொகுதிக்கு ஊராட்சிக்கோட்டை குடிநீரைக் கொண்டுவருவேன் எனச் சொன்னேன். அது 400 கோடி ரூபாய் பட்ஜெட். அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி அதைக் கொண்டுவர முடியும்? ஈரோடு அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக்குவேன் எனக் கூறினேன், அரசு ஒத்துழைப்பு இல்லை. எனவே, இதை எல்லாம் நிறைவேற்ற முடியவில்லை. ஈரோட்டில் தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகள் இல்லாததால் பொது சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை என அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால், இங்கிருப்பவர்கள் எதிர்ப்பைக் கிளப்பியதால் ஐந்து மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று சொன்னார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு ஒத்துழைப்பு இல்லாததுதான். ஆனால் என்னுடைய நிதியை பள்ளிக்கூடங்களுக்குப் புதிய வகுப்பறைகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தியிருக்கிறேன்.’’

‘‘கடந்த தேர்தலில் உங்களால் தோற்கடிக்கப்பட்டவர் முத்துச்சாமி. இந்தத் தேர்தலில் அவர் போட்டியிட நினைத்திருந்த தொகுதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு உங்களுக்கு எப்படி கிடைக்கும்?


‘‘இந்தத் தேர்தலில் இங்கேயே போட்டியிட எனக்காகத் தொகுதியை விட்டுக்கொடுத்தவர் அண்ணன் முத்துச்சாமி. அதனால், எனக்கு தி.மு.க-வின் முழு ஒத்துழைப்பு இருக்கிறது. எனக்காக அவர்கள் மிகக் கடுமையாகப் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் அவர்களின் உதவியோடு வெற்றிபெறுவேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்