முதல்வர் வேட்பாளருக்கு ஒரு லட்சம் வாக்குகள்!

அன்புமணியின் பென்னாகரம் ப்ளான்

மிழக சட்டமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முதல்வர் வேட்பாளரை பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து தேர்தல் களத்தில் இறங்கியது பாட்டாளி மக்கள் கட்சி. இப்போது முதல்வர் வேட்பாளர் அன்புமணி பென்னாகரத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரபூர்வமாக இப்போதுதான் அறிவிக்கப்பட்டபோதிலும் பல மாதங்களாக பா.ம.க-வினர் பென்னாகரத்தில் முகாமிட்டுத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ராஜ்ய சபா எம்.பி-யாக, லோக்சபா எம்.பி-யாக அன்புமணி ராமதாஸ் அனுபவம் பெற்றபோதிலும் அவர் சந்திக்கப்போகும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுதான்.

“அன்புமணி ஆகிய நான்...” என தமிழகம் முழுவதும் மேடைகளில் உரையாடிய அன்புமணி போட்டியிடும் தொகுதியை அலசினோம். பா.ம.க-வும், தி.மு.க-வும் வலுவாக இருக்கும் தொகுதி பென்னாகரம். தங்கள் அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதுவதால்தான் இன்றுவரை ‘பென்னாகரம் ஃபார்முலா’ என்று பேசிவருகிறார் ராமதாஸ். பா.ம.க-வுக்குத் திடீரென இந்த அந்தஸ்த்தையை தந்துவிடவில்லை பென்னாகரம் தொகுதி மக்கள். 1996-ல் தனித்துப் போட்டியிட்போதும், 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டபோதும் பா.ம.க தலைவர் ஜி.கே.மணியை வெற்றிபெறச் செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பியவர்கள்தான் பென்னாகரம் தொகுதி மக்கள்.

2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருந்ததால், பென்னாகரத்தில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பெரியண்ணன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பெரியண்ணன் இறந்தபிறகு நடந்த இடைத்தேர்தலில் அவரின் மகன் இன்பசேகரனுக்கு சீட் கொடுத்தது தி.மு.க. பா.ம.க., ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை வேட்பாளராக அறிவித்தது. அந்த இடைத்தேர்தலில் இரண்டாம் இடம்பிடித்து, அ.தி.மு.க-வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியதுடன் அந்தக் கட்சியை டெபாசிட் இழக்கச்செய்தது பா.ம.க.
2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க-வுடன் கரம் கோர்த்த பா.ம.க-வுக்கு பென்னாகரத்தைக் கொடுக்காமல், இன்பசேகரனை நிறுத்திய தி.மு.க தோற்றுப்போனது. அ.தி.மு.க கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நஞ்சப்பன் வெற்றி பெற்றார். நஞ்சப்பன் 1989-ல் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றவர். அவர், அந்தப் பகுதியில் செல்வாக்குமிக்கவர் என்றாலும்கூட, இன்பசேகரனுக்கு பா.ம.க வேலை செய்யாமல் போனதால்தான் தி.மு.க தோற்றது என்று தி.மு.க-வினர் புலம்பினர். அந்த அளவுக்கு பா.ம.க பென்னாகரத்தில் வேரூன்றியது. தொகுதி மக்கள் விரும்பியதால், பென்னாகரத்தில் போட்டியிடுகிறேன் என்று பேட்டி கொடுத்தாலும் ஆரம்பத்தில் இருந்து இங்கு வலுவாக இருப்பதால்தான் அன்புமணி பென்னாகரத்தை ‘டிக்’ அடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 89,654 வாக்குகள் பா.ம.க-வுக்கு விழுந்தன. இதன்மூலம் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க-வுக்கு அதிக வாக்குகள் கிடைத்த சட்டமன்றத் தொகுதியாக பென்னாகரம் மாறிப்போக... பென்னாகரம் எங்கள் கோட்டை என்பதை அழுத்திச் சொல்ல ஆரம்பித்தார்கள் பா.ம.க-வினர். ஜெயலலிதாவே இங்கு போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது என்று சவால் விட்டார்கள். அன்புமணி முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டபோதே, பென்னாகரத்தில் போட்டியிடுவது என்று அவர் முடிவு செய்துவிட்டார் என்று இப்போது சொல்கிறார்கள்.

பென்னாகரத்தில் சுமார் 50 சதவிகிதம் வன்னியர்கள் இருக்கிறார்கள். ஏரியூர் ஒன்றியம், பாப்பாரப்பட்டி, பிக்கிலி உள்ளிட்ட இடங்களில் பா.ம.க-வுக்கு முழு செல்வாக்கு இருக்கிறது. இருந்தாலும் பா.ம.க அசால்ட்டாக இருந்துவிடவில்லை. தமிழகம் முழுவதும் ஹைடெக் பிரசாரம் மேற்கொண்டுவரும் அன்புமணிக்கு ஆதரவாக, தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே ஆதிகாலத்து திண்ணைப் பிரசாரத்தை பென்னாகரத்தில் முடித்துவிட்டார்கள்.  தங்களது  திண்ணைப் பிரசாரத்திலும் மாற்றத்தைக் காண்பித்து இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்