எலெக்‌ஷன் என்சைக்ளோபீடியா

ரலாற்றுத் தொகுப்பாக ‘தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016’ என்ற தேர்தல் ஆவணத்தைத் தயாரித்திருக்கிறது இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம். தேர்தல் ஆணையம் என்றால் என்ன? அதன் பணிகள், தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் சட்டங்கள், வேட்பாளர்கள் செலவுக் கணக்கு, சட்டமன்ற வரலாறு, தொகுதி சீரமைப்பு, தொகுதிகள் பட்டியல், தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவுகள் என நிறைய தகவல்கள் இந்த ஆவணத்தில் கொட்டிக் கிடக்கிறது. கட்சிகளின் பங்களிப்பு கட்சிகளின் சதவிகிதம் என புள்ளிவிவங்களும்  இடம்பெற்றிருக்கின்றன.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்ட கட்சிகள் எவை? அந்தக் கட்சிகள் பெற்ற வாக்குவிகிதம் என்ன என்பது போன்ற விவரங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 1952 தேர்தல் முதல் 2011 தேர்தல் வரையில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், அவர்கள் பெற்ற வாக்குகள், இரண்டாம் இடம் பிடித்தவர்களின் வாக்கு சதவிகிதம் ஆகியவை ஒவ்வொரு தொகுதிக்கும் அட்டவணை போட்டுத் தயாரித்திருக்கிறார்கள். தேர்தலில் பெண்களின் பங்களிப்பு பற்றியும் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். போட்டியிட்ட பெண்கள், வென்றவர்கள் ஆகியவையும் தொகுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினருக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் இந்தப் புத்தகம் பெரிய சொத்து. பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய வகையில் தயாரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பொதுத் தேர்தலின்போதும் இதுபோன்ற ஆவணத்தை சென்னையில் உள்ள இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்து வருகிறது. ஆனால், இந்த முறை முழுக்க தமிழ் மொழியில் தயாரித்திருப்பதுதான் சாதனை. ஞாயிற்றுக்கிழமைக்கூட வேலை பார்த்து இந்தப் புத்தகத்தை ஊழியர்கள் தயாரித்திருக்கிறார்கள். இந்த ஆவணத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டிருக்கிறார்.

தொடரட்டும் பணி!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படம்: மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்