‘‘வெற்றிக்கு வழிகாட்டும் 3 காரணங்கள்”

இது கனிமொழியின் கணக்கு!

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தி.மு.க சார்பில் டாக்டர் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் என்.வ.என்.சோமுவின் மகள். சுறுசுறுப்பாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.  

“மகப்பேறு மருத்துவ ஆலோசகராக இருக்கும் நீங்கள், திடீரென தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கிறீர்களே?”

“கடந்த 10 வருடங்களாக அப்போலோ மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ ஆலோசகராக இருக்கிறேன். தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் என் தாத்தா என்.வி.நடராஜன். அப்பா என்.வி.என்.சோமு, லேபர் யூனியன் லீடராகவும் இருந்தார். மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார். நான் எம்.பி.பி.எஸ் படித்துக்கொண்டு இருக்கும்போது, அப்பா மரணம் அடைந்தார். தாத்தா, அப்பாவைப் பார்த்துதான் எனக்கு சின்ன வயதிலிருந்தே அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. என் தாத்தா, அப்பா இருவரும் தி.மு.க-வில் இருந்ததால், எனக்கு சீட் கிடைத்தது எனச் சொல்ல மாட்டேன். தி.மு.க-வில் இணைய, அவர்கள் எனக்கு அறிமுகமாக இருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.” 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்