பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்திய போலீஸார்!

டாஸ்மாக் போராட்டத்தில் அத்துமீறலா?

‘‘மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கைப் படிப்படியாக மூடுவோம்’’ என்று முதல்வர் ஜெயலலிதாவே சொல்லும் அளவுக்கு இந்தத் தேர்தலில் முக்கியப் பிரச்னையாக டாஸ்மாக் மாறியுள்ளது. இந்த நிலையில்தான்,  டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று போராடிய ‘மக்கள் அதிகாரம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்களின் ஆடைகளை உருவி போலீஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஏப்ரல் 20-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை இந்த அமைப்பினர் முற்றுகையிட்டனர். அவர்கள் மீது போலீஸார் அத்துமீறி நடந்துள்ளனர். இதுகுறித்து, போராட்டத்துக்கு தலைமை வகித்த மக்கள் அதிகார அமைப்பின் மண்டல  ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியனிடம் பேசினோம்.

“ ‘டாஸ்மாக்கை மூடவேண்டும்’ என்று சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தர்மபுரி, விழுப்புரம் என 6 இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். சென்னையில் நடந்த போராட்டத்தில் 150 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். டாஸ்மாக் மண்டல அலுவலகத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது. இதனால், அறவழியில் நாங்கள் போராட்டத்தைத் தொடங்கினோம். ஆனால், போலீஸார் அராஜமாக நடந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்களின் ஆடைகளைப் பிடித்து ஆண் போலீஸார் இழுத்தனர். 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் புடவையை நடுரோட்டில்வைத்து போலீஸார் உருவினர்.

15-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. சுடிதார் அணிந்திருந்த சில பெண்களின் கால்சட்டையை ஆண் போலீஸார் உருவினார்கள். அதை நாங்கள் தடுத்தோம். அதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஐந்து பெண்களும், நான்கு ஆண்களும் மயக்கம் அடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்