ரூ.96 ஆயிரம் கோடி ஊழல்?

‘ஷாக்’ அடிக்கும் மின்சார ஆவணப்படம்!

ட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ‘ஊழல் மின்சாரம்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார்  மின் பொறியாளர் சா.காந்தி. இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு, இரண்டு முறை தேதி குறிக்கப்பட்டும், அதை அவரால் வெளியிட முடியவில்லை. அரசியல் கட்சிகளின் தலையீடு காரணமாக, தேர்தல் ஆணையமும் காவல் துறையும் அந்த ஆவணப்படத்தை முடக்கியிருந்தது. பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த ஆவணப்படத்தை சைலன்டாக வெளியிட்டு முடித்துள்ளனர்.

‘அனைவருக்கும் மின்சாரம் பரவலாக்கப்படும்’ என்ற கனவோடு 1948-ல் மின்சார வழங்கல் சட்டத்தை அம்பேத்கர் கொண்டு வந்தார். அதில் இருந்து படம் தொடங்குகிறது. அதன் பின்னர், குறுக்கும் நெடுக்குமாக தொடங்கப்பட்ட திட்டங்கள், காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மின்வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்துவந்த மின்சாரம் எப்படி தனியார் வசம் போனது போன்ற விவரங்களை அந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்