‘‘அம்மா! தாயே! ஆளை மாத்துங்கம்மா!”

போயஸ் கார்டன் கதவைத் தட்டிய புகார்கள்

வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டுப் பிரசாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டார் ஜெயலலிதா. ஆனால், வேட்பாளர்களை மாற்றுவதற்கான அஸ்திரங்களை இன்னமும் நிறுத்தவில்லை கட்சிக்காரர்கள்!

அ.தி.மு.க-வில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்களுக்கு எதிராகப் பல அதிரடிப் புகார்களைக் கட்சியினர் போயஸ் கார்டனுக்கு ஃபேக்ஸ் செய்து வருகின்றனர். போயஸ் கார்டனில் தினந்தோறும் மலைபோல புகார்கள் குவிந்ததால், ஃபேக்ஸ் மிஷின் ஆஃப் செய்து வைக்கப்பட்டது. இதனால் ஜூனியர் விகடனுக்கு அந்தப் புகார்களை அ.தி.மு.க-வினர் அனுப்பி வருகின்றனர்.

குறிப்பிட்ட சில வேட்பாளர்கள் மீது அனுப்பி வைக்கப்பட்டுள்ள புகார்களின் சாராம்சம் இவை:

ராஜேந்திர பிரசாத், பத்மனாபபுரம்: 2001-2006 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தார். அப்போது பெண் ஒருவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. அந்தப் பெண்ணுக்கு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் வாய்ப்பும் வாங்கிக் கொடுத்தவர். இந்தத் தொடர்பை கண்டித்த அந்தப் பெண்ணின் கணவர் மர்மமான முறையில் இறந்து போனார். இதனால்தான் ராஜேந்திர பிரசாத் அமைச்சர் பதவியை இழந்தார். அப்படிப்பட்டவருக்கு எப்படி தொகுதி வழங்கப்பட்டது என்று  கார்டனுக்கு அனுப்பிய புகாரில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
குணசேகரன், திருப்பூர் தெற்கு: திருப்பூரில் நடைபெற்ற மிகப் பெரிய நிதி நிறுவன மோசடியான ‘பாசி’யில் இவர் பெயர் அடிப்பட்டது என்கிறார்கள். இதுதவிர, வேறு ஒரு ஃபைனான்ஸ் நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறாராம். சமீபத்தில் இங்கு வருமானவரித் துறை சார்பில் ரெய்டு நடத்தப்பட்டது என்று அந்தக் கடிதத்தில் உள்ளது. கோவையில் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றை முறைகேடாக அபகரித்துக்கொண்டதாக புகார்களை அடுக்குகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

சண்முகம், கிணத்துக்கடவு:  1996-ம் ஆண்டு ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, காரில் பொருத்தியிருந்த கொடியை அகற்றிவிட்டுக் கேரளாவுக்குச் சென்று தலைமறைவானவர் என்று புகார் கடிதத்தில் உள்ளது. தி.மு.க ஆட்சியின்போது தி.மு.க பிரமுகர்களுடன் இணைந்து கேரளாவுக்கு மணல், அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க-வினர் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள். தற்போதைய ஆட்சியிலும் அதே நிலை என்கிறார்கள். டாஸ்மாக் பார்களில் இவர் செல்வாக்கானவர்   என்றும் குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்