மிஸ்டர் கழுகு: தொடரும் மரணங்கள்... வதை முகாம்!

‘வெயில்’ ஜெயில் மீட்டிங்!

‘‘ ‘ஜெயலலிதா கூட்டத்துக்குப் போனால், 300 ரூபாய்... இறந்தால், 3 லட்சம் ரூபாய்’ இப்படியொரு செய்தி வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது’’ என்றபடியே வந்து அமர்ந்தார் கழுகார்.

‘‘விருத்தாசலம் கூட்டத்தில் இரண்டு பேர் இறந்த சோகம் மறைவதற்குள் சேலத்தில் இரண்டு பேர் மாண்டது கோடை வெப்பத்தைத் தாண்டிக் கொதிக்க ஆரம்பித்திருக்கிறது. ‘மக்களுக்காக நான்... மக்களுக்காகவே நான்’ என மேடைக்கு மேடை முழங்கும் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டத்தில்தான் மக்கள் வதைபடுகிறார்கள் என எதிர்க் கட்சிகள் கண்டனக் கனைகளைத் தொடுத்திருக்கின்றன. இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் பிரசார ஸ்டைல் கொஞ்சம் மாறிவிட்டது. பொட்டல்வெளியில் மக்கள் அமர்ந்திருக்க... ஜெயலலிதாவின் மேடை மட்டும் குளுகுளு ஊட்டிபோல காட்சி அளிக்கிறது. ஜெயலலிதா அமரும் மேடைக்குள் 20 ஏர் கூலர்களும் 8 ஏஸிகளும் போடப்பட்டிருக்கின்றன. அதையும் தாண்டி வெப்பம் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக மேடையை ஒட்டி எதிரே 5 மீட்டர் அகலம் 50 மீட்டர் நீளத்துக்கு செயற்கை புல் தரை போட்டுவைத்திருக்கிறார்கள். கடைசியாக நடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரையில் மேடை பிரசாரம் என்றால், ஜெயலலிதா அருகிலேயே வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது வழக்கம். வேன் பிரசாரம் என்றால், பக்கத்தில் ஒரு ஜீப்பில் வேட்பாளர் நிற்பார். ஆனால், இந்தத் தேர்தலில் வேட்பாளர்களைக்கூட மேடை ஏற்றாமல் இரட்டை மேடைகள் போட்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா மேடைக்குக் கீழே சிறிய மேடை போட்டு அதில்தான் அந்தந்த பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அமர வைக்கப்பட்டனர். பாவம் அவர்களும்கூட வெயிலில்தான் காய்கிறார்கள்.’’

‘‘ஜெயலலிதா பிரசாரக் கூட்ட ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன?’’

‘‘பொட்டல்வெளியில்தான். பிரசார மைதானத்தில் ஜெயலலிதா பேசும் மேடையைத் தவிர, மற்றப் பகுதிகள் எல்லாம் திறந்தவெளிகள்தான். பிரசாரம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டு அதற்குள்தான் ஆட்களைக் கொண்டுவந்து அடைக்கிறார்கள். இப்படி அடைக்கப்படு கிறவர்கள்தான் வெயில் கொடுமை தாங்க முடியாமலும், நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர். கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையமும் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரித்திருந்தது. ‘பகலில் வீட்டைவிட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்’ எனப் பல கலெக்டர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனால், ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்கள் எல்லாம் மாலை மூன்று மணிக்குதான் நடைபெறுகின்றன. ஆனால், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு காலை 11 மணிக்கே கூட்டத்தைத் திரட்டிவந்து உணவுப் பொட்டலமும் தண்ணீர் பாக்கெட்டும் கொடுத்து கம்பி வேலிக்குள் திணிக்கிறார்கள்.’’

‘‘ஐயோ!’’

‘‘சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 46 வேட்பாளர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் சேலம் மகுடஞ்சாவடி கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த மாவட்டங்களில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மாலை 4 மணிக்குதான் ஜெயலலிதா உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணியில் இருந்தே ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு வார்டு, கிளைச் செயலாளர்களும் தலா 500 பேரையும் ஊராட்சி செயலாளர்கள் 1,000 பேரையும் கட்டாயம் கூட்டத்துக்கு அழைத்துவர வேண்டும் என்பது உத்தரவு. சரக்கு லாரி, கல், மண் ஏற்றும் டிப்பர் லாரி, மினிடோர் வாகனங்களில் நீண்ட தூரத்தில் இருந்து மக்கள் ஏற்றி வரப்பட்டனர். இந்த வாகனங்கள் அனைத்தும் திறந்தநிலையில் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மக்கள் அழைத்து வந்து சேரும்போதே பலரும் சோர்ந்துவிடுகிறார்கள். அவர்களை இரும்புத் தடுப்புகளால் அமைக்கப்பட்டிருந்த மைதானத்துக்குள் வெட்ட வெளியில் 106 டிகிரி பாரன்ஷீட் சுட்டெரிக்கும் வெயிலில் அமர வைக்கிறார்கள்.’’

‘‘கேரள தேர்தல் பிரசாரத்தை சேலத்தில் நடத்தியதே சாதனைதான்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்