பெரியோர்களே... தாய்மார்களே! - 83

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

‘‘ஊருக்கு ஊரு சாராயம்
தள்ளாடுது தமிழகம்’’
- என்று முதலில் ஒலித்தது ஒரே ஒரு கோவன் குரல். ஒருநாள் நள்ளிரவில் அவரது திருச்சி குடிசையில் இருந்து தூக்கி வந்து சிறையில் அடைத்ததன் விளைவு, கோவன் பாட்டை கோடிக்கணக்கான மக்கள் பாடுகிறார்கள்.

‘‘வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே..
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?’’

- என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

 என்ன  செய்ய முடியும் ஜெயலலிதாவால்? ‘‘எனக்கும் பூரண மதுவிலக்குதான் லட்சியம்” என்று இரண்டு ஆண்டுகள் கழித்து வேகாத வெயிலில் 14 டன் ஏசியில் உட்கார்ந்து புலம்பத்தான் முடியும்.

உங்களுக்கு நந்தினியை ஞாபகம் இருக்கிறதா? படித்தோம். மனதுக்குப் பிடித்தவனை கைப்பிடித்தோம். வக்கீல் ஆனோம். சம்பாதித்தோம். செத்தோம் என வாழத் தெரியாத மதுரை சட்டக்கல்லூரி மாணவி. ‘டாஸ்மாக்கை மூடு’ என்று நித்தமும் போராடிக்கொண்டு இருக்கிறார். ‘‘ஏன்டீ எங்க லிமிட்டுல வந்து உண்ணாவிரதம் உட்கார்ந்து கழுத்தை அறுக்கிற’’ என்று பெண் போலீஸே அவரைத் திட்டுகிறது. போலீஸில் ஆண் போலீஸ் என்ன, பெண் போலீஸ் என்ன? காக்கி உடுப்பின் முதல் இலக்கணமே கண்ணியத்தைத் துற என்று இருந்தால் என்ன செய்வது? நாட்டுக்காக, அடுத்தவர் வீட்டுக்காக 60 முறை கைதாகி வாழ்ந்து வருகிறார் வாழும் வள்ளியம்மையான நந்தினி.

பெரிய குடும்பம். மாளிகை போன்ற வீடு. வேலையாட்கள். மகன் பெரிய அரசியல் கட்சித் தலைவர். நான்கு தலைமுறை பார்த்தாகிவிட்டது. நிம்மதியாக வாழ மனம் இல்லாமல் ஒருநாள் காலையில் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடைவாசலில் வந்து உட்கார்ந்தார் வைகோவின் தாயார் மாரியம்மாள். அந்த இடத்தையே பாகிஸ்தான் பார்டர்போல ஆக்கிவிட்டது போலீஸ். 60 நாட்களில் மனித தெய்வமான மாரியம்மாளே இறந்துபோனார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்